பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, December 29, 2014

நாளை 30-12-2014 அன்று 128 தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் 42 நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகின்றது.

விழுப்புரம் மண்டலக்கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு.

             விழுப்புரம், கடலூர் மாவட்டம் இணைந்த விழுப்புரம் மண்டலக்கூட்டம் விழுப்புரத்தில் 27-12-2014 அன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றியும், மாநில மாநாடு பங்கேற்பு பற்றியும் பேசினார்கள். அனைவரும் மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளனர்.

Monday, December 15, 2014

திருச்சி மற்றும் சென்னை மண்டலமாநாடு ஆயத்தக்கூடம் நிகழ்வுகள்.

             திருச்சி மண்டல ஆயத்தக்கூட்டம்   13-12-2014 அன்று பெரம்பலூரிலும், சென்னை மண்டல ஆய்வு கூட்டம்  14-12-2014 அன்று திருவள்ளூரிலும் நடைபெற்றது. மண்டலச்செயலாளர்கள் த.ஹேமலதா, அ.குருநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர் ரெங்கராஜ், மாநில மகளிர் அணிச்செயலாளர் இந்திராதேவி, செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி  ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.






Wednesday, November 26, 2014

மாநில மாநாடு ஆயத்தக்கூட்டம் மதுரை மண்டலத்தில் நடைபெற்றது.

             சனவரி-2015 இல் சென்னையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டம் மதுரையில் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அனைவரும் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.





Sunday, November 23, 2014

கன்னியாகுமரியில் மாநில மாநாடு தயாரிப்பு கூட்டம் - மாநில நிர்வாகிகள் பங்கேற்பு.



           கன்னியாகுமாரியில் 22-11-2014 சனிக்கிழமை அன்று தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில மாநாடு தயாரிப்பு ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் , தலைவர் , பொருளாளர் கலந்து கொண்டனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு அனைவரும் சனவரி 2015 சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்தனர்.

M.Phil படிக்க முன் அனுமதி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களே அளிக்கலாம். தொ.க.இயக்குநர் உத்தரவு.

Wednesday, November 19, 2014

திருச்சியில் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 16-11-2014 அன்று நடைபெற்றது.

மாநில செயற்குழு தீர்மானம்.

 நாள்:  16-11-2014,                       இடம்: பிஷப் ஹிபர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.


  1. சங்க மாநில மாநாடு சென்னை தாம்பரம் பகுதியில் 2015 சனவரி மாதம் கடைசியில் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
  2. 2015 ஆண்டுக்கான சங்க டைரி தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்து தீர்மானிக்கப்படுகிறது.
  3. விலையில்ல நோட்டு புத்தகம் நோடல் மையத்திலிருந்து ஒன்றியங்களுக்கு கோண்டுவந்து பள்ளிகளுக்கு வழங்க லாரி வாடகை     ( 2013 - 14 மற்றும் 2014 - 2015 கல்வி ஆண்டுக்கு ) இன்று வரை வழங்கவில்லை. உடனே வாடகை வழங்காத பட்சத்தில் மூன்றாவது பருவத்திற்கான நோட்டு புத்தகம் எடுத்து வழ்து வழங்க மறுபரிசீலனை செய்யப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.











Monday, November 3, 2014

இன்று உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியேற்க உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.

            உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து இன்று (03-11-2014) உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியேற்க உள்ள அனைவருக்கும் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம்  பணிசிறக்க வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

Friday, October 31, 2014

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு - தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்ததகட்டில் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

CPS- திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி ஓய்வின் போது மறுநியமன கால ஊதியம் எவ்வாறு வழங்குவது - அரசாணை 170 வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் விலையில்லாத் திட்டங்கள் - 07-11-2014 அன்று கரூர் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் - கரூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைச் சார்ந்த AEEO / DEEO பங்கேற்க உள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணி ஓய்வு - தமிழ் நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பாராட்டு விழா !


Sunday, October 26, 2014

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு

சென்னை : அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,
இயக்குனர் தெரிவித்தார்.

Tuesday, October 21, 2014

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துகள்.


அ.பாலகிருஷ்ணன்,          ச.பாஸ்கர்,            ப.மாதவராஜ்,    இரா.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர்,       பொதுச்செயலாளர்,  பொருளாளர்,     இணைச்செயலாளர்

உண்மைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்பிட வேண்டாம் - அரசுத்தேர்வு இயக்குனர் உத்தரவு

Monday, October 20, 2014

அகில உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவர் திரு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார் - தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.

  

         அகில உலக ஆசிரியர்  அமைப்பின் துணைத்தலைவரும்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முந்நாள் மாநில பொதுச்செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

25.10.2014 அன்று சென்னையில் - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வு பட்டியல்

பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம் ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன் பின்னர் பி.எட். படித்து முடித்தனர்.

இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர்.

யு.ஜி.சி. விதிகள்

பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத முடியாது என்று அந்தத் “துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உத்தரவு ரத்து

யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம் படித்துள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 13, 2014

வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை! - தினமலர்.

சென்னை:ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முதல், இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித் துறை அலுவலகங்களுக்கு வரக் கூடாது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர் அறிவிப்பு.

           PUTPF கணக்கு முடித்திட கால அவகாசம் கேட்டு எழுதிக் கொடுத்திட LF தணிக்கைத் துறை கேட்டால் எந்த AEEO-ம் எழுதி கொடுத்திட வேண்டாம்.  தணிக்கைத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் வர இயலாத சூழலை நமது கடிதத்தை பயன்படுத்தி மறைக்கும் வேலைகள் நடைபெறுவதால், இதை காரணமாக பயன்படுத்தி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் தணிக்கைக்கு AEEO-க்கள் தயாராக இல்லாததால் தணிக்கை முடிக்க இயலவில்லை என தணிக்கைத் துறை கூறுகின்றனர். இதனால் பல பிரச்சனைகள் எழுகின்றது. எனவே இனி தணிக்கையை உடன் முடித்திட நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறேன்.


       2014 நாட்காட்டியுடன் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசாணைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட நமது சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே முக்கியமான அரசாணைகள், இயக்குநர் உத்தரவுகள், தெளிவுரைகள், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன்படக்கூடிய உத்தரவுகளை நமது பொதுச்செயலாளரின் கீழ்க்கண்ட முகவரிக்கு நகல் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்கிறோம்.
              சி.பாஸ்கரன்
              உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
              60A, 2-வது தெரு
             கோவிந்தராஜபுரம்
             நந்திவரம்
             காஞ்சிபுரம் மாவட்டம் - 603 202.

Friday, September 26, 2014

ஆசிரியர்கள் நியமனத்தில் 80 இடங்களை காலியாக வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் 80 இடங்களை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை காதக்குறிச்சி தமிழரசன் தாக்கல் செய்த மனு: பி.எஸ்.சி., -பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 92 மதிப்பெண் பெற்றேன். இதனால், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றேன். 2014 மே 30 ல் தமிழக அரசு, 'பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்பிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,' என உத்தரவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை வேறு; அதிக மதிப்பெண் பெறுவது கடினம். அரசு உத்தரவில் பணிமூப்பு, அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவில்லை. எனக்கு 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது.
தகுதித் தேர்வில் 92 மதிப்பெண் வாங்கினாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் 59.08 ஆக குறைந்து விட்டது. இதனால், ஆசிரியர் பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. தகுதித் தேர்வு அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.இதுபோல மேலும் பலர் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிராக மனுக்கள் செய்தனர்.தனிநீதிபதி இடைக்கால உத்தரவில், "கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது,” என்றார்.
தனி நீதிபதியின் உத்தரவு அடிப்படையில், 14 மனுக்கள் மீது மட்டும் நேற்று முன்தினம் அரசுத்தரப்பில், ' வெயிட்டேஜ் மதிப்பெண் சரியான நடைமுறைதான். இதற்கு எதிரான மனுக்களை சென்னை ஐகோர்ட் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது,' என்றார்.
நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று பிரதான மற்றும் நிலுவையில் உள்ள பிற மனுக்களை விசாரித்தார்.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," மனுதாரர்களின் நலன் கருதி, நியமனத்தில் 80 இடங்கள் காலியாக வைக்கப்படும். நியமன நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: அரசுத் தரப்பு தெரிவித்தபடி 80 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவுப்படி, நியமன நடைமுறைகளை தொடர டி.ஆர்.பி., விரும்புகிறது. மனுதாரர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நியமன நடைமுறையில் தலையிட விரும்பவில்லை. நியமன நடைமுறை தொடரலாம். விசாரணை அக்.,7 க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

சென்னை :புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளனர்.

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

மதுரை :அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல
மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

Tuesday, September 16, 2014

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து

மதுரை :"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில்,
குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Thursday, September 4, 2014

ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்.

                 சு.பாலகிருஷ்ணன்              சி.பாஸ்கரன்                 ப.மாதவராஜன்          இரா.தமிழ்ச்செல்வன்
                  மாநிலத் தலைவர்       பொதுச்செயலாளர்            பொருளாளர்               இணைச்செயலாளர்

Monday, August 11, 2014

பட்டப் படிப்புக்கு பின்பு பிளஸ் 2 முடித்த பெண் : ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரியே: ஐகோர்ட்

பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், விளம்பரம் வெளியிட்டது. கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. அதில், கனிமொழி என்பவர், கலந்து கொண்டார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார். தேர்வுப் பட்டியலில், இவரது பெயர் இடம் பெறவில்லை. பட்டப் படிப்புக்கு முன், கனிமொழி, பிளஸ் 2 படிக்கவில்லை என்றும் 2009, ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இல்லாததால், தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்வு பட்டியலை ரத்து செய்யவும், தன்னை தேர்ந்தெடுத்து, முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'கனிமொழி பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனத்துக்கு, பரிசீலிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி இயக்குனர் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், அரசு வழக்கறிஞர், கார்த்திகேயன், 'அப்பீல்' மனுத் தாக்கல் செய்தனர். அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார், ''பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, 2009ல் பிறப்பித்த உத்தரவுப்படி, பிளஸ் 2 முடித்த பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே, தகுதி பெறுகின்றனர். '2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும்' என, உயர் நீதிமன்றமும்
உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், கனிமொழி, பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். அதன்பின், பி.எட்., எம்.ஏ., பட்டங்களை பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 2009ல், பணியாளர்கள் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை பிறப்பித்த அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பு முடித்த பின் பெறப்படும், பட்டயம், பட்டப் படிப்பு, முதுகலை படிப்பை தான், பணி நியமனத்துக்கு பரிசீலிக்க முடியும். 'இந்த அரசாணை செல்லும்', என, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க, மனுதாரர்கள் தான், உரிய அதிகாரிகள். அரசாணையில் கூறப்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், பணியிடத்துக்கு
பரிசீலிக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த போது, கனிமொழி, பிளஸ் 2 முடித்திருக்கவில்லை. அதனால் தான், பட்டப் படிப்பு, முதுகலை படிப்புக்குப் பின், பிளஸ் 2 முடித்துள்ளார். இரண்டு ஆண்டு, பிளஸ் 2 படிப்புக்கு செல்லாமல், தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றுள்ளார். ரெகுலர் படிப்புக்கும், தனி தேர்வு எழுதுபவர் களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மாணவர்களுக்கு கல்வி புகட்ட, கல்வித் தரம் பேணப்பட வேண்டும் என்பது தான், மனுதாரர்களின் தலையாய கடமை. எனவே, கனி மொழியை நிராகரித்தது, தன்னிச்சையான முடிவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Saturday, August 9, 2014

46 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் DEO / DEEO பணியிடங்களுக்கு பதவி உயர்வு.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள DEEO / DEO பணியிடங்களுக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதல்முறையாக நிர்வாக  திறமையை உயர்த்திட 11.08.2014 முதல் 10 நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில்  அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு ஆணை அளிக்கப்பட உள்ளது.

Saturday, August 2, 2014

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீதான நடவடிக்கை விவர அட்டவணை; அரசு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்யும்படி அட்வகேட் ஜெனரலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வக்கீல் கே.பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மழலையர் பள்ளிகள்

தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகாரம் சட்டத்தின்படி, கல்வி வாரியத்தின் இணைப்பை பெறுவதற்கு முன்பு தனியார் பள்ளிகள் அரசிடம் அங்கீகாரத்தினை பெற்று இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன.
நடவடிக்கை
எனவே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது;-

எதிர்மனுதாரர்களான தனியார் பள்ளிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்களில், பல கோணங்களில் வாதம் செய்தனர்.

அட்டவணை
ஒருசிலர், தங்களது கட்சிக்காரர்கள் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்று செயல்படுவதாகவும், வேறு சிலர் தங்கள் கட்சிக்காரர்கள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகாரச்சட்டத்தின்படி, பகல் நேர குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை நடத்துவதாகவும் வாதிட்டார்கள்.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளின் அங்கீகாரத்தையும் எங்களால் சரி பார்க்க முடியாது. அதே நேரம், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவர அட்டவணையை தாக்கல் செய்வதாக கூறினார்.

எனவே, இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று அந்த அட்டவணையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

Thursday, July 31, 2014

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்; 192 பள்ளிகள் தரம் உயர்வு: 1,682 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் மாண்புமிகு முதல்வர் அறிவிப்பு

 புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் புதிதாக 1,682 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்

செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக்கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

கட்டாய கல்வி
2. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

3. நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

நிலை உயர்வு
4. நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

நிரந்தர முடக்கம்

5. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

பயிற்சி ஏடுகள்
6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. கழிவறைகளை கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத்திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப்பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10–ம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறை பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

5 உண்டு உறைவிடப்பள்ளிகள்
8. தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப்பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக்கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித்திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும்.

கூடுதல் வகுப்பறைகள்

10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித்தரப்படும்.

11. 2013–14–ம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும்.

சிறப்பு பயிற்சிகள்

12. சிறப்பு கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும்.

13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக்கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.

இவ்வாறு மாண்புமிகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

Tuesday, July 29, 2014

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகளை தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தெரிவிக்கிறது.

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம்

Saturday, July 26, 2014

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

Friday, July 11, 2014

மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சியான செய்தி வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்வு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகையும் அதிகரிப்பு


மாத சம்பளதாரருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக இருந்து வந்தது. பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும். இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பலன் அடைவார்கள்.

மூத்த குடிமக்களுக்கு சலுகை
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் உயர்த்தப்படுகிறது. இது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக வெளியான பிற முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடைய தனிநபர்களுக்கான வரி 10 சதவீதமாக நீடிக்கும்.
* ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு வருமான வரி 30 சதவீதமும் விதிக்கப்பட்டு வருவது தொடரும்.
சேமிப்புக்கு சலுகை
* சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது சேமிப்பினை ஊக்குவிக்கும் முடிவாக அமைந்துள்ளது.
* பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.
*வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதுவும் ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
* வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருமான வரி தீர்வு ஆணையம் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 7, 2014

திருச்சியில் 06-07-2014 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.

       உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற வகையில் சிறப்பாக நடத்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
                மேலும் அரசாணை 182ஐ நடைமுறைப்படுத்தி இதுவரை 15 AEEOக்கள் உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு விரைவில் நடத்துவது எனவும், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவியுயர்வு பணியிடமாக அறிவித்து உரிய ஊதியவிகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,  மாவட்ட புத்தக மையத்தில் இருந்து ஒன்றியத்திற்கு பாடபுத்தகம், குறிப்பேடுகள் எடுத்து சென்றுள்ளமைக்கு உரிய போக்குவரத்து செலவினங்களை விரைவில் வழங்கிடவும், பள்ளிகளை பார்வையிடவும், உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவும் சென்று வருகின்ற  AEEOக்களுக்கு பயணப்படி பட்டியல்கள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளதால் அவற்றை உடன் வழங்கிடவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களை பொதுச்செயலாளர் பாஸ்கர் முன்மொழிந்து பேசினார். மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று தீர்மானம் சார்ந்த கருத்துகளையும், மாநில முழுவதும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 75 உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 30, 2014

நீதிமன்ற தீர்ப்பாணையை நடைமுறைப்படுத்தி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ5100 தர ஊதியம் கோரி கல்வித்துறை செயலரிடம் நேரில் மாநில நிர்வாகிகள் மனு.

        தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 27-06-2014 அன்று சென்னையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்,  கல்வித்துறைச்செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை  சந்தித்து சென்னைஉயர்நீதி மன்றம் மதுரைக்கிளையின் உத்தரவினை நடைமுறைப்படுத்திட கோரினார்கள்.

Thursday, June 26, 2014

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத, 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீசு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூ தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகைநாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.81 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கவில்லை என்று அவர்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி உத்தரவிட்டது.

இதன்பின்னர், அந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்தது. இதற்கிடையில், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 77 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விசாரிக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே மாணவர்கள் உதவி தொகையை கையாடல் செய்த 77 தலைமை ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.