பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, December 30, 2013

VOLUNTARY RETIREMENT - D.A.V.C. VIGILANCE CLEARANCE தொடர்பான அரசுக்கடிதம்.

காஞ்சிபுரம் மற்றும் நாகையில் நடைபெற்ற மாவட்ட நிகழ்வுகள்



உயர்நிலைப்பள்ளித் த.ஆ. பதவி உயர்வுக்காக பணியாற்றிய பொதுச்செயலாளர் பாஸ்கரன் அவர்களை பாராட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட முந்நாள் தலைவர் ஹரிஹரன் அவர்கள் வைத்துள்ள பேனர்:   
-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒருங்கினைந்த தஞ்சை மாவட்ட அளவில், நாகைமாவட்டம் சீர்காழியில்  தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டி நடைபெற்ற மண்டலக்கூட்டம்.








Thursday, December 26, 2013

2013 - 2014 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகத்திற்கான செலவின நிதி ஒதுக்கீடு

          விலையில்லா பாடப்புத்தகம்-நோட்டு மாவட்ட மையத்திலிருந்து எடுத்து வந்து பள்ளிகளுக்கு அனுப்பிட AEEO-க்கள் செலவிட்ட செலவினங்களுக்கு இது நாள் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திருச்சியில் 24-11-2013 ல் நடைபெற்ற மாநில செயற்குழுவின் தீர்மானத்தை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் அவர்களிடம் வழங்கியதின் விளைவாக 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதிக்கீடு தற்போது அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிதியினை விரைந்து பெற நடவடிக்கை எடுத்த மாநில பொதுச்செயலாளர் திரு.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் நன்றி. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் செலவினத்தை பெற்றிட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை அனுகவும்.

Tuesday, December 24, 2013

சென்னை - பல்லாவரத்தில் மாநில மாநாடு ஆயத்த சிறப்பு செயற்குழு கூட்டம்

         தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு சென்னை பல்லாவரத்தில் 26-12-2013 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
       உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துதல், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியினை பதவி உயர்வு பணியிடமாக அறிவித்தல் ஆகியன சார்ந்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது.





Tuesday, December 17, 2013

மாண்புமிகு கல்வி அமைச்சருடன் மாநில நிர்வாகிகள் வேலூர் மாவட்ட AEEOக்கள் சந்திப்பு - நிகழ்வுகள்.

 மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு.

            அரசாணை 182-ஐ அமுல்படுத்தி 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜ், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாவட்ட தலைவர் சார்லஸ் பீட்டர் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள், அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  
                    பிறகு அமைச்சருடன் பேசிய  பொதுச்செயலாளர்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திட  தேதி ஒதுக்கித் தர வேண்டும்மெனவும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு  பணியிடமாக அறிவித்திட ஆவன செய்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். 
                     நன்றி அறிவிப்பு மாநாடு தேதி விரைவில் அறிவிப்பதாகவும், பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டிய கோரிக்கையை மாண்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர்  மற்றும் இயக்குனருடன் கலந்து பேசி ஆவன செய்வதாகவும்  அறிவித்தார்.










உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களான AEEOக்கள் விபரம்.

             AEEO பெயர் - பதவி உயர்வில் செல்லும் மாவட்டம்
1. திரு.கே.சுதந்திரன் - திருப்பூர் மாவட்டம்.
2.திரு.ஆர்.தாமோதரன் - புதுக்கோட்டை மாவட்டம்.
3.திரு.ஆர். நாகராஜன் -  புதுக்கோட்டை மாவட்டம்.
4.திரு.இ.ஜெயலதா - தஞ்சாவூர் மாவட்டம்.
5.திரு.எ.ஆரோக்கியசாமி - தஞ்சாவூர் மாவட்டம்.
6. திரு.எஸ்.ஜெயராஜ் - பதவித்துறப்பு.
6.திரு.கே.ராஜ மாரீஸ் - திண்டுக்கல் மாவட்டம்.

பதவி உயர்வில் செல்லும் சங்க உறுப்பினர்கள் அனைவரின் பணிசிறக்க மாநில அமைப்பின் சார்பில்  நல் வாழ்த்துக்கள்.

Friday, December 13, 2013

தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் கடுமையான உழைப்பினால் AEEOக்கள் 7 பேர் பதவி உயர்வு

      உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கிட அரசாணை வெளியிட்ட பிறகு நீண்ட நாட்களாக நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் கடும் உழைப்பின் பயனாக அரசாணை-182-ன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (14-12-2013) காலை 10 மணிக்கு கலந்தாய்வு மூலம் 33-க்கு 1 AEEO என்ற அடிப்படையில் முன்னுரிமை 34,68,100,134,168,200,234 வரிசைப்படி கீழ்கண்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி  உயர்வு பெற உள்ளனர். இக்கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு நல்கிய மற்றும் உழைத்த அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் நன்றி.  

DSE - BRC SUP TO HSHM & BT TO HSHM COUNSELING REG PROC 

DSE - BT_PG_AEEO TO HSHM PANEL AS ON 1.1.2013

 

                            

வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் மீள உயர் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாற்றம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரவள மைய மேற்பார்வையாளர்களை மீள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் கலந்தாய்வு நாளை (14-12-2013) அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நடைபெற உள்ளது.

Sunday, December 8, 2013

திருச்சியில் 08-12-2013ல் நடைபெற்ற அவசர மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள்

2013-2014 நாட்குறிப்பு, நாள்காட்டி வெளியிடுவது, நாட்குறிப்புக்கு பெயர் பட்டியல் - முன்பணம் செலுத்துவது, உறுப்பினர் சந்தா-வழக்கு நிதி செலுத்தாத மாவட்டங்கள் விவரம், உ.தொ.க.அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்த கோப்பின் தற்போதைய நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசியர் பதவி உயர்வு,அரசாணை 234&179 சார்பில் மாநில அளவில் நிகழும் பிரச்சனைகள் பற்றி நடைபெற்ற விவாதத்தின் போது எடுத்த படம்.