பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, October 21, 2016

மாநில செயற்குழு அழைப்பிதழ்

தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுடன் மாநிலத்தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொருளாளர் ப.மாதவராஜன், பொதுச்செயலாளர் பொறுப்பு இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்திப்பு.



      தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு


      1.   உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலுவையிலுள்ள  கோப்புகள் மீது முடிவெடுத்து பாதிக்கப்பட்டுள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர கோரப்பட்டது.
            விரைவில் உரிய ஆணைகளை வழங்கிடுவதாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் கூறினார்கள்.

           2.   உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் இளையோர்மூத்தோர் ஊதிய முரண்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட கோரப்பட்டது.

         இக்கோரிக்கை குறித்து ஆலோசனை செய்ததில் கோரிக்கை ஏற்க இயலாது, தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் இளையோர்மூத்தோர் ஊதிய முரண்பாடு குறித்து  விரைந்து விதிகளின்படி முடிவெடுத்து ஆணையிடுவதாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் கூறினார்கள்

               3.   EDU-SAT மூலம் நடைபெறும் கூட்டங்களில் பல இடங்களில் இயக்குநர் அளிக்கும் ஆலோசனைகள் சரிவர கேட்க இயலாமல்  EDU-SAT தொழில்நுட்ப தடங்கள் அடிக்கடி ஏற்படுவதால் கூட்டம் முடிவுற்றவுடன் இயக்குநர் மின் அஞ்சல் மூலம் கூட்ட நிகழ்வுகளை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க கோரப்பட்டது.

               இனி வரும் கூட்டங்களில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

           4. உதவித் தொடக்கக்கல்வி அலுவலங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிட நேரிடுவதால் போதிய பணியாளர்களை நியமிக்க கோரப்பட்டது.

            மிகுந்த பிரச்சனைகள் மற்றும் பணியாளர்கள் மிகக்குறைவாக உள்ள அலுவலகங்களின் பெயர்ப்பட்டியல் வழங்கினால் பணியாளர்கள் நியமனம் செய்வதாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளார்கள்.
  
           5. மாதந்தோறும் நடைபெறும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்ஆசிரியர் பயிற்றுநர் இணைந்த பள்ளிப்பார்வை அறிக்கைகள் மீது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திடவும், இப்பார்வையை பணியாற்றும் ஒன்றியத்தை விடுத்து அருகாமையில் உள்ள பிற ஒன்றியங்களை பார்வையிட  உத்திரவிடுமாறும் கோரப்பட்டது.

          அடுத்து நடைபெற உள்ள  பார்வைகள் பிற ஒன்றியங்களில் பார்வையிடவும், பார்வை அறிக்கைகள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுத்திடவதாகவும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கூறினார்கள்.
  

திரு. எஸ். சேதுராமவர்மா 
இணை இயக்குநர் பணியாளர் தொகுதி 
அவர்களுடன் சந்திப்பு.

உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு பேசப்பட்டது. உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் பணியாளர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் உடன்  உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குவதாக கூறினார்கள். பட்டியல் இருந்தால் கொடுங்கள் மாறுதல் வழங்கிட கூறுகிறேன்மற்ற அலுவலகங்களில் இருந்து மாற்றுப்பணி மூலம் பணியாளர்கள் நியமிக்க இயலாது எனவும் கூறினார்கள். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணிச்சுமை குறித்து நன்கு உணர்ந்துள்ள இணை இயக்குநர் அவர்கள் எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் 56 கண்காணிப்பாளர் நியமனம் குறித்து அரசின் முடிவில் உள்ளதாக கூறினார்கள்.

 திருமதி கே. சிகலா 
இணை இயக்குநர் (நிர்வாகம்), தொடக்கக்கல்வித்துறை
திருமதி என்.லதா
இணை இயக்குநர் ( மேல்நிலைக்கல்வி)
       --- ஆகியோரை சந்தித்து புதியதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்:
       உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தீர்ப்பின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.