பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, November 9, 2017

DEE -TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெறும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!




பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

சென்னை : கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக இருந்த குப்புசாமி, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனராகவும்,

பள்ளிக்கல்வி, பணியாளர் பிரிவு இணை இயக்குனராக இருந்த சசிகலா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும்,

ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்கக இணை இயக்குனராக இருந்த குமார், கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராகவும்,

எஸ்.எஸ்.ஏ இயக்கக இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராகவும்,

ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக இருந்த ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஏ., இயக்கக இணை இயக்குனராகவும்,

தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராக இருந்த நாகராஜ் முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்கக இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tuesday, November 7, 2017

கண் துடைப்பாகும் கல்வி ஆய்வு கூட்டங்கள் : களத்தில் கலெக்டர்கள்.

மதுரை: கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கற்றல், கற்பித்தல் மேம்பாடு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், 14 வகை நலத்திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டங்களில் நடக்கும் கட்டடப் பணிகள், புதிய வகுப்பறை, பள்ளி சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் 'நபார்டு' திட்டத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் அறிக்கை
தயாரித்து, துறை செயலருக்கு அளிக்கப்படுகின்றன.
மேம்போக்காக உள்ள இந்த அறிக்கைகளில் திருப்தி இல்லாததால், கலெக்டர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி கல்வித்துறை செயல்பாடு குறித்து கலெக்டர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும்
விரிவான அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர்களுக்கு, துறை செயலர் பிரதீப் யாதவ்
கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்வித் துறையில் ஆர்வம் உள்ள பல கலெக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர். இது கற்றல் கற்பித்தல் மேம்படவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உந்துதலாகவும் உள்ளது.
இது கல்வித்தரம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோல் அனைத்து கலெக்டர்களும் ஆய்வு செய்து முழு அறிக்கை, கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
கண் துடைப்புக்காக பெயரளவில் ஆய்வுகள் நடத்தி அறிக்கை சமர்ப்பித்த கல்வி அதிகாரிகளுக்கு, செயலரின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்.

         'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

       வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.
தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

Wednesday, November 1, 2017

அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

        அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
       இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.