பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, November 30, 2013

CEO, SSA CEO, DEO,IMS, DEEO ஆகியோர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 05-12-2013 காலை 9.30 மணிக்கு தாம்பரம் கார்லி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.


மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை  முதன்மைச்செயலர்  கலந்து கொள்ளும் அனைத்து மாவட்ட CEO, SSA CEO, DEEO, DEO, IMS ஆகியோர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் கார்லி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
உத்தரவினை படித்திட click here to download

Thursday, November 28, 2013

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் சென்னையில் 26-11-2013 அன்று சந்திப்பு


தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் சந்தித்து திருச்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்,  உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணிச்சுமை, நீதி மன்ற வழக்குகள் ஆகியவை சார்ந்து   இயக்குநர் பெருமகனாரிடம்  கலந்துரையாடினார்கள்.

உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இடைக்காலத்தடை நீக்கம் - தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் அடுத்த வெற்றி!

தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பான அனைத்து தடையானைகள் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணையை இரத்து செய்திட மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாதவராஜ் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் (28-11-2013) சென்னை உயர்நீதி மன்றம் தடையாணையை இரத்து செய்துள்ளது. இதன் பயனாக விரைவில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதில் AEEO-க்கள் 3% பதவி உயர்வு பெற உள்ளனர். இது மாநில நிர்வாகிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாதவராஜ் ஆகியோரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பாராட்டுகிறது.

Monday, November 25, 2013

24-11-2013ல் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்



நாள்:24-11-2013(ஞாயிற்றுக்கிழமை),  இடம்:சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி

   திருச்சி

தீர்மானங்கள்.

1. 18 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்திவரும் எங்கள் பிரதான கோரிக்கையான (தொடக்கக்கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று) உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவித்திட ஆவண செய்யுமாறு தமிழக அரசை இம்மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

2. அரசாணை 182-ன் படி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் விதி திருத்தம் மேற்கொண்ட நாள் முதல் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் (மதுரைக்கிளை) அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தனி நீதிபதி தடையை காரணம் காட்டி பதவி உயர்வை நிறுத்தி வைத்துள்ள நிலையை மாற்றி உடன் 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3. தொடக்கக்கல்வித்துறையில் ஏற்படும் வழக்குகளை கவனிக்க மாவட்ட அளவில் சட்ட அலுவலர் (Law Officer) பணியிடம் உருவாக்கிட  இம் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

4. பெரும் பொருட்செலவு, பெரும் மன உளைச்சலை தவிர்த்திடும் பொருட்டு  216 & 179 அரசாணை சார்ந்த வழக்குகளை Batch case ஆக நடத்திட இம்மாநில செயற்குழு  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

5. அரசாணை 216 & 179 –ன்படி தலைமை ஆசிரியர் ஊதிய நிர்ணயம் சார்ந்து நீதி மன்ற தொடர் நடவடிக்கை எடுப்பது பற்றி சரியான வழிகாட்டுதல் எழுத்து பூர்வமாக அறிவித்திட வேண்டுமென இம் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

6. பல்வேறு பணிகளுக்கிடையே பல இடங்களுக்கும் பார்வை, ஆய்வு பணிகளுக்கு செல்லும் உதவித் தொடக்கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நிலுவை உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கிட இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. விலையில்லா பாடப்புத்தகம்-நோட்டு மாவட்ட மையத்திலிருந்து எடுத்து வந்து பள்ளிகளுக்கு அனுப்பிட இது நாள் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. உடன் (2013-14 கல்வியாண்டுக்கு) நிதி ஒதுக்கீடு செய்துதர வேண்டுமாய் இம் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8. உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பிட இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.