பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, August 18, 2015

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 12பேர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு.

           இன்று நடைபெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 12 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர். பதவி உயர்வில் சென்றுள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணி சிறக்க தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.
                     01.01.2015 பட்டியலில் வரிசை எண்கள்  4,7,14,16 ஆகியோர் பதவி உயர்வில் செல்லவில்லை.

Tuesday, August 11, 2015

விலையில்லா குறிப்பேடுகள் 2015 -2016 ஆம் ஆண்டிற்கு AEEOக்கள் பெற்று வழங்கியமைக்கான செலவினத்திற்கான காசோலைகள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடன் பெற்றிட பொதுச்செயலாளர் அறிவிப்பு.

           நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான குறிப்பேடுகள் பெற்று வழங்கியமைக்கான லாரி வாடகை செலவினத்தை (2015 -2016 )தற்போது DEEOக்களிடம் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வழங்கியுள்ளார். அரசு ஒதுக்கிய நிதியினை தற்போது ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தூரம் மற்றும் கி.மீ. இவற்றிற்கு ஏற்ற வகையில் பிரித்து வழங்கி தொ.க. இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2013 - 2014, 2014 - 2015 கல்வி ஆண்டிற்கான செலவினத்தை நிதித்துறையிலிருந்து பெறுவதற்கான தொடர் நடவடிக்கைகளை  சங்கம் செய்து வருகின்றது. விரைவில் அதற்கான செலவினங்களும் அரசால் நிதி ஒதுக்கப்பட உள்ளது. 




பெரும்பான்மையான AEEOக்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றனர். தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தது.

           கடந்த 08-08-2015 அன்று சென்னை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு நிகழ்வினை தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்கள், அலுவலர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டு கல்வித்துறை முன்னேற உழைத்திட வேண்டுமென கூறி தொடங்கிவைத்தார். தொடர்ந்து இணை இயக்குநர்கள் (நிர்வாகம்) மற்றும் (நிதி உதவி பெறும் பள்ளிகள்) இருவரும் நான்கு மண்டலங்களாக  அனைத்து AEEOக்களுக்கும் மாறுதல் கலந்தாய்வினை சிறப்பாக நடத்தினார்கள். உடனுக்குடன் மாறுதல் ஆணைகளை தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் வழங்கினார்கள்.  சிறப்பாக கலந்தாய்வினை நடத்தி அனைவரும் மகிழத்தக்க வகையில் செயல்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை மாநிலத்தலைவர் இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Thursday, August 6, 2015

உதவி தொடக்கக்கல்வி அலுவலராக தலைமை ஆசிரியர்கள்75 பேருக்கு 'புரமோஷன்'

          தமிழக தொடக்கக்கல்வியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை மறுநாள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
இத்துடன், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சிலிங், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி அரங்கில், வரும் 8ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.