பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, October 22, 2017

7 வது ஊதியக்குழு - சில தகவல்கள்.

ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================

 1) வளரூதியம்(Increment)
      ===================
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.
எனவே 3% Increment எணில் தற்போது பெரும் புதிய ஊதியத்திற்கு அடுத்த ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக எடுத்து கொள்ளவேண்டும்.

2)ஊக்கவளரூதியம்(Incentive)
    =======================
      ஊக்க வளரூதியம் எனில் 3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த இரண்டாவது ஊதியத்தை எ.டு;10 ம் Pay cell ஊதியம் பெற்றால் 12ஆம் Pay Cell ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

3)தோ்வுநிலை(Selectiongrade)
    =======================

4) சிறப்புநிலை(Specialgrade)
    =======================
         Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) அதாவது Level 1 முதல் 23 வரை நமது துறையைப் பொருத்தவரை OA முதல் Add.To &AO வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தோ்வுநிலை)20 ஆண்டுகள் (சிறப்புநிலை)பணிபுரிந்தால், வழக்கத்தின்படியே 3%+3%, ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே இதனையும் தனியே கூட்டிப் பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் (Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில்
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும்.
அதாவது 12 ஆம் Pay cellஐ அடிப்படையாக கொண்ட நபர் 14 ஆம் அணிஊதியத்திற்கு நகர்ந்து அதையே அடிப்படை ஊதியமாகப் பெருவாா்.

5)தேக்கவளரூதியம்(Stagnaton Increment)
     ========
                   
தரஊதியம் Rs. 6000முதல் 10000 அதாவது (Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.நமது துறையைப் பொருத்தவரை கரூவூல அலுவலா்&CAO பணியிடம் மற்றும் அதற்கும் மேல் உள்ள பணியிடங்களில்,ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்தால் ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு(Paycell) நகர்த்ப்படுவாா்.

6)வெகுமதி வளரூதியம்
 ========= ===========
(Bonus Increment)
===============
 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம்
ஆண்டு முடிவில் 3%Bonus Increment அனுமதிக்கப்படும். Paymarrix ல் உள்ள Paycellல் 15 ஆம் அணி(PayCell) ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா்.

7)கூடுதல் வளரூதியம்
    =================
    (Additional Increment)
==================
         01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 5200−20200 என்பதில் 20200
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.

8)முத்தோா் இளையோா் ஊதிய முரண்பாடு
    ==================
(Junior get MorePay)
=======================

இதற்கு 3%Increment மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது இளையோரை விட
முதியவருக்கு Pay Cellல் ஒரு Cell அதிகரிக்கப்படும். இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்.

9)தனிஊதியம்( Personal Pay)
   =======================
        ஆசிரியர்,BDO, Thashiltar, போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. ஆனால் 6 ம் ஊதியக்குமு
போன்று 7 ம் ஊதியக்குமுவில் தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது. அகவிலைப்படி கணக்கிட எடுத்துக்கொள்ளலாம். வீட்டு வாடகைப்படி கணக்கிட எடுத்துக்கொள்ளக்கூடாது.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

திருப்பி அனுப்பும்

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், 'மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்' என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.'பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்' என, தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத வாய்ப்பு

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.

Friday, October 13, 2017

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு.

       தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி (டி.ஏ.) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

      தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 1.7.17 முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

       ஆறாவது மத்திய சம்பள கமி‌ஷன் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக முன்தேதியிட்டு 1.7.2017 முதல் உயர்த்தி ஆணையிட்டுள்ளது.
      2016–ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குவோருக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.7.17 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
திருத்தி அமைக்கப்பட்ட அகவிலைப்படி, பகுதிநேர அலுவலர்களுக்கு கிடையாது
        திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு – அனைத்திந்திய தொழில் நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங்களின் கீழ் சம்பளம் பெறும் அலுவலர்கள், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்–உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய் துறையிலுள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களை சந்தித்து பேசப்பட்டது.





7வது ஊதியக்குழு சில விபரங்கள்..

1.     தர ஊதியம் அகற்றப்பட்டு LEVEL 1 to 32 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 2.      Pay Matrix-ல் பதவி உயர்வில் செல்லும் போது ஒரு LEVEL அடுத்த நிலைக்கு (Horizontal Range) இடதுபுறமாகவும், ஆண்டு ஊதிய உயர்வுக்கு  (Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

3.      தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் செய்திட வழக்கம் போல்3% வழங்கப்பட்டுள்ளது. PAY MATRIX அட்டவணையில் (Vertical Range) இரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

4.      01.01.2016 அல்லது விருப்பம் தெரிவிக்கும் நாளில் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி எடுத்துக்கொண்டு 2.57 ஆல்பெருக்கப்பட்டு புதிய ஊதியம்  நிர்ணயம் செய்யப்படவேண்டும். இது 01.01.2016 அல்லது அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு நாள் அல்லது அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்குள் பதவி உயர்வில் சென்ற தேதி ஆகியவற்றில் ஒன்றை விருப்ப நாளாக தெரிவித்திட வேண்டும்.
5.  ஊதிய நிர்ணயம் செய்திட அடிப்படை ஊதியம் + தர ஊதியம் மட்டும் கணக்கில் எடுத்திட வேண்டும். (இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ரூ.750 தனி ஊதியத்திற்கு தனியாக ரூ. 2000/- தனி ஊதியமாக வைத்திட வேண்டும்).
6. அகவிலைப்படி.
    01-01-2016     =  0 % புதிய அடிப்படை ஊதியத்திற்கு
    01-07-2016     =  2 %                      ”
    01-01-2017     =  4 %                      ”
    01-07-2016     =  5 %                       ”
7. இதர படிகள் ( HRA, CCA) பட்டியல் தனியாக அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
8. இனி ஆண்டு ஊதிய உயர்வுகள் PAY MATRIX அட்டவணையின் படி Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ---- தொடரும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு அரசாணை 303 வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 9, 2017

'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, செப்.,ல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் திறந்திருந்தாலும், தலைமை
ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை,'ஸ்டிரைக்'கில் பங்கேற்றதால், வகுப்புகள்
நடைபெறவில்லை.

இந்நிலையில், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்டி, வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் முதல், டிச., வரை, ஒன்பது சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள், உத்தரவிட்டு உள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்.

தனியார் பள்ளி ஆசிரியர் களும், ௨௦௧௯க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

'தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், ௨௦௧௧ முதல், அனைத்து புதிய ஆசிரியர் களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010ல், வெளியிட்ட அறிவிப்பில், 'புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்' என, தெரிவித்தது.

'தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்' என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கூடுதல் அவகாசம்

இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், ௨௦௧௦க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ௨௦௧௪ வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்
கப்பட்டு, ௨௦௧௯ வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தகுதி தேர்வு

அதில், 'மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 'இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி-தினமலர்.

       60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது.
 மாநில அளவில் 125 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ., க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலை பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையிலும் உள்ளது. சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.

ஆங்கில வழிக் கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவு தலைமை ஆசிரியர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும் பணியில் பாடங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு பட்டியல் விபரத்தை வெளியிட வேண்டும். இக்குழுவில் தகுதி, திறமை, அனுபவமில்லாத ஆசிரியர் சிலர் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்த நிலையிலும் நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும், வெளிப்படையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, October 6, 2017

டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்.

        ''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என, கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: திறந்த வெளிப்படையான விரைவான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும்.
இதனால் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்படும். கணினிமயமாக்குவதன் மூலம், உடனுக்குடன் இதுபோன்ற குறைகளை சரி செய்ய முடியும்.
வங்கி கணக்குகளை அலைபேசியில் வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்வதை போல, அரசு ஊழியர்கள் தங்கள் அலைபேசியில் பணிப்பதிவேடு பதிவுகளை பார்த்து கொள்ளலாம். ஊழியர்கள் குறித்து வயது, பணி அனுபவம் என ஏதாவது ஒரு அடிப்படையில் கணக்
கெடுக்க அரசு உத்தரவிடும் போது, தற்போது மூன்று நாட்களுக்கு மேலாகி
விடுகிறது.
கணினிமயமாக்குவதால், உடனுக்குடன் கணக்கெடுத்து விட முடியும். இதுகுறித்து அடுத்த வாரம் திருநெல்வேலி, திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது, என்றார்.

அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும், தமிழக அரசு
ஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.