பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, October 31, 2014

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு - தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்ததகட்டில் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

CPS- திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி ஓய்வின் போது மறுநியமன கால ஊதியம் எவ்வாறு வழங்குவது - அரசாணை 170 வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் விலையில்லாத் திட்டங்கள் - 07-11-2014 அன்று கரூர் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் - கரூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைச் சார்ந்த AEEO / DEEO பங்கேற்க உள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணி ஓய்வு - தமிழ் நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பாராட்டு விழா !


Sunday, October 26, 2014

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு

சென்னை : அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,
இயக்குனர் தெரிவித்தார்.

Tuesday, October 21, 2014

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துகள்.


அ.பாலகிருஷ்ணன்,          ச.பாஸ்கர்,            ப.மாதவராஜ்,    இரா.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர்,       பொதுச்செயலாளர்,  பொருளாளர்,     இணைச்செயலாளர்

உண்மைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்பிட வேண்டாம் - அரசுத்தேர்வு இயக்குனர் உத்தரவு

Monday, October 20, 2014

அகில உலக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவர் திரு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார் - தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.

  

         அகில உலக ஆசிரியர்  அமைப்பின் துணைத்தலைவரும்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முந்நாள் மாநில பொதுச்செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

25.10.2014 அன்று சென்னையில் - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வு பட்டியல்

பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம் ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன் பின்னர் பி.எட். படித்து முடித்தனர்.

இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர்.

யு.ஜி.சி. விதிகள்

பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத முடியாது என்று அந்தத் “துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உத்தரவு ரத்து

யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம் படித்துள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 13, 2014

வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை! - தினமலர்.

சென்னை:ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முதல், இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித் துறை அலுவலகங்களுக்கு வரக் கூடாது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர் அறிவிப்பு.

           PUTPF கணக்கு முடித்திட கால அவகாசம் கேட்டு எழுதிக் கொடுத்திட LF தணிக்கைத் துறை கேட்டால் எந்த AEEO-ம் எழுதி கொடுத்திட வேண்டாம்.  தணிக்கைத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் வர இயலாத சூழலை நமது கடிதத்தை பயன்படுத்தி மறைக்கும் வேலைகள் நடைபெறுவதால், இதை காரணமாக பயன்படுத்தி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் தணிக்கைக்கு AEEO-க்கள் தயாராக இல்லாததால் தணிக்கை முடிக்க இயலவில்லை என தணிக்கைத் துறை கூறுகின்றனர். இதனால் பல பிரச்சனைகள் எழுகின்றது. எனவே இனி தணிக்கையை உடன் முடித்திட நடவடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்கிறேன்.


       2014 நாட்காட்டியுடன் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசாணைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட நமது சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே முக்கியமான அரசாணைகள், இயக்குநர் உத்தரவுகள், தெளிவுரைகள், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயன்படக்கூடிய உத்தரவுகளை நமது பொதுச்செயலாளரின் கீழ்க்கண்ட முகவரிக்கு நகல் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்கிறோம்.
              சி.பாஸ்கரன்
              உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
              60A, 2-வது தெரு
             கோவிந்தராஜபுரம்
             நந்திவரம்
             காஞ்சிபுரம் மாவட்டம் - 603 202.