பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, September 30, 2015

நமது மாநில மாநாட்டு கோரிக்கையான 2014 - 2015 கல்வி ஆண்டிற்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பெற்று வழங்கியமைக்காக போக்குவரத்து செலவினமாக ரூ.75 இலட்சம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

                நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான முப்பருவ முறையில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் மாவட்ட மையத்தில் பெற்று ஒன்றியத்திற்கு உதவி  தொடக்கக்கல்வி   அலுவலர்கள்  வழங்கியமைக்கு         2014 - 2015 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவின தொகை ரூ.75 இலட்சம் அனுமதித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டிற்கான போக்குவரத்து செலவினத் தொகையும் விரைவில் வழங்கிட தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டு வருகிறது.



Sunday, September 27, 2015

அரசாணை 242 ஐ பெற்றதற்காக பொதுச்செயலாளரை பாராட்டி ஜே.எஸ்.ஆர் கூட்டணியின் மாநில பொருளாளர் ஹரிகரன் மாலை அணிவித்தார்.

           நமது சங்கத்தின் முன்னாள் காஞ்சி மாவட்ட செயலாளரும், தற்போது ஜே.எஸ்.ஆர். கூட்டணியின் மாநில பொருளாளருமான திரு.ஹரிகரன் அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுலர்களுக்கு ரூ.4900 தர ஊதியம் பெறுவதற்காக உழைத்திட்ட நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலார் திருபாஸ்கர் அவர்களை  மலர்மாலை அணிவித்து பாராட்டுகிறார்.
                       

Friday, September 25, 2015

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜேம்ஸ் நீதிமன்ற வழக்கில் ரூ.4900 தர ஊதியம் உயர்த்தி வழங்கிஅரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்திற்கு கிடைத்த இமாலய வெற்றி!

               வழக்கறிஞர் திரு.லெட்சுமணன் அவர்களின் அயரா முயற்சியாலும்,  நமது இயக்கத்தின் தொடர் முயற்சியாலும் இந்த வழக்கில் உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

          திரு.ஜேம்ஸ் தொடர்ந்த நீதி மன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் பொருட்டு மனுதாரர் உதவித்தொடக்ககல்வி அலுவலரின் ஊதிய விகிதம் ரூ.9300 - 34800 + தர  ஊதியம் ரூ.4900 என  மாற்றி அமைக்கப்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
      
அரசாணை எண். 242 (நிதித்துறை /CMPC) நாள். 23-09-2015. இந்த அரசாணை மேல்முறையீட்டு மனுவின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது 




Tuesday, September 15, 2015

திருச்சியில் 20-09-2015 அன்று மாநில செயற்குழு கூட்டம் அழைப்பு.

தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறுகின்றது.

நாள்     :    20-09-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்  :     காலை 10.30 மணி.
இடம்   :     பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
                     சத்திரம் பேருந்து நிலையம் அருகில்
                     தெப்பக்குளம்,
                     திருச்சி.
                                                   கூட்டப்பொருள்:

 1. நமது சங்கம் தொடுத்துள்ள நீதிமன்ற வழக்குகள் தற்போதைய நிலை.
 2. மாவட்டங்களில் சங்க தேர்தல் நடத்துதல்.
 3. 2015 -2016 உறுப்பினர் சந்தா மற்றும் நிலுவை சந்தா செலுத்துதல்.
 4. 2015 - 2016 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம்.
 5. 2014 - 2015 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம் பெறப்பட்ட 
                          விபரம்.
 6. 2013 - 2014 குறிப்பேடு விநியோகம் - போக்குவரத்து செலவினம் தொடர் 
                         நடவடிக்கைகள் .
 7. மாநிலம் முழுவதும் AEEOக்கள் எதிர் நேக்கும் பிரச்சனைகள்.
 8. உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் இதர தீர்மானங்கள்.
                      செயற்குழு உறுப்பினர்கள்  அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
                                                                                 சு.பாஸ்கரன்
                                                                      மாநில பொதுச்செயலாளர்

Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்


Tuesday, September 1, 2015

40 தலைமை ஆசிரியர்களுக்கு DEEO, DEO பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி

               தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அவர்களுக்கான பயிற்சியளிக்கப்படுகிறது.கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“மாவட்ட கல்வி அதிகாரிக்கான பொறுப்புகள், விதிகள், நிர்வாகம் குறித்து முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்,”என்றார்.