பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, January 11, 2017

உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு Web "e" Pay Roll முறையினை செயல்படுத்துதல் - Modem மற்றும் Internet வழங்குவதற்குகாக நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக கிடைக்கப்பட்டது.


நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக BSNL நிறுவனம் மூலம் தற்போது INTERNET வசதி AEEO  அலுவலகங்களுக்கு ஏற்படுத்துவதற்கு தொடர் செலவினம் அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்கள், மதிப்புமிகு தமிழ்நாடு பாடநூல் மேலாண் இயக்குநர் அவர்கள், மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள், பாடநூல் கழக உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.


 

     

Monday, January 9, 2017

மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்னையில் இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்தினை நமது சங்கத்தின் சார்பில் தெரிவித்தனர்..

 மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
  மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
  மதிப்புமிகு இணை இயக்குநர் (பணியாளர் ) அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
  மதிப்புமிகு மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட்டது.

  மதிப்புமிகு தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் செயலர் இயக்குநர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சங்கத்தின் நாட்காட்டி, நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்கநரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர்கள் சந்திப்பின் போது உயர்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பதவி  உயர்வு வழக்கின் நிலை (தற்போது முடிவேதும் இல்லை), பயணப்பட்டியல் நிலுவை, விலையில்லாப் பொருட்கள் ஒன்றிய அளவில் வழங்குதல், நிதி நாடும் பள்ளிகள் பார்வை ஆகியன பற்றி தொடர்புடைய இயக்குநர் பெருமக்களிடம் விவாதிக்கப்பட்டது.

திருச்சியில் 08-01-2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகள்.

       மாநிலத் தலைவர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் நமது சங்கத்தின் 2017 ஆம் ஆண்டு நாட்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றை வெளியிட 2017 டைரியை உருவாக்கிய மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 30 மாவட்டங்களில் இருந்து வருகைதந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்க செயல்பாடுகள், மாவட்டங்களில் DEEO அலுவலகங்களில் உள்ள பிரச்சனைகள், ஆசிரியர் சங்கத்தின் பெயரால் சில இடங்களில் உருவாக்கும் பிரச்சனைகள் பற்றியும், சங்கத்தின் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், AEEOக்களின் நிலுவை பயணப்பட்டியலை தொடக்கக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்ட பிறகும் அனுமதித்திடாத DEEO அலுவலகங்கள் நிலை பற்றியும் விவாதித்தனர். தற்போது AEEO அலுவலகங்களுக்கு கணினி, பிரின்ட்டர், மேஜை, மோடம் மற்றும் இணைய இணைப்பு ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் கழக நிதி மூலம் பெற நமது சங்கம் 2013 முதல் எடுத்த நடவடிக்கைகள், விரைவில் இணையவசதிக்கு மாதக்கட்டணம் தொடர்செலவினத்திற்கு நிதி ஒதுக்கீடு அரசாணை சில நாட்களில் பெற உள்ளது பற்றியும் பொதுச்செயலாளர் கூறினார். 2017 ஆம் ஆண்டில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தனி ஊதிய விகிதம் பெறுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.மாநில பொருளாளர் மாதவராஜன் நிதி தொடர்பாக பேசினார்.













Wednesday, January 4, 2017

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 2017 நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி அழைப்பு. திருச்சியில் டி.வி.எஸ். டோல்கேட் ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 08-01-2017 அன்று நடைபெறுகிறது.

            தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 2017 நாட்காட்டி,நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி திருச்சி, TVS டோல்கேட் அருகில் உள்ள ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10.30 மணிக்கு நடைபெறுகிறது. உறுப்பினர் சந்தா நிலுவை, டைரி நிலுவை ஒப்படைத்திட வேண்டும். ஒரு டைரி + நாட்காட்டி விலை ரூ.200 ஆகும். கூடுதல் நாட்காட்டி தேவைப்படுவோர் ரூ.50 கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் 09-01-2017 திங்கள் , 10-01-2017 ஆகிய இரு நாட்கள் சென்னையில் இயக்குநர்கள், அமைச்சர் பெருமக்களை சங்கத்தின் சார்பில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாநில செயற்குழு மற்றும் சென்னை சந்திப்புக்கும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் வருகைதர கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இரா.இரவிச்சந்திரன் - மாநிலத்தலைவர், சி.பாஸ்கரன் - பொதுச்செயலாளர், 
ப.மாதவராஜன்- மாநிலப்பொருளாளர், இரா.தமிழ்ச்செல்வன்- மாநில இணைச்செயலாளர்.

Monday, January 2, 2017

உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கு இணையம் (INTERNET) வசதியுடன் மோடம் - நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை  தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்   இணையம் (INTERNET) வசதியுடன் மோடம், புதிய கணினி, சாம்சங் M2876FD  Multifunction பிரிண்டர்,  மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது. புத்தாண்டு பரிசாக Internet மாதச்செலவினத்திற்கு 32 மாவட்டங்களுக்கும் ஆண்டொண்டிற்கு ஏறத்தாழ ரூ.60 இலட்சம் தொடர் செலவினமாக அரசாணை வர உள்ளது. பொருட்களை அலுவலக இருப்புப்பதிவேட்டில் பதிவு செய்திட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுக்கும், தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.