பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, January 2, 2017

உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கு இணையம் (INTERNET) வசதியுடன் மோடம் - நமது சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை  தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்   இணையம் (INTERNET) வசதியுடன் மோடம், புதிய கணினி, சாம்சங் M2876FD  Multifunction பிரிண்டர்,  மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது. புத்தாண்டு பரிசாக Internet மாதச்செலவினத்திற்கு 32 மாவட்டங்களுக்கும் ஆண்டொண்டிற்கு ஏறத்தாழ ரூ.60 இலட்சம் தொடர் செலவினமாக அரசாணை வர உள்ளது. பொருட்களை அலுவலக இருப்புப்பதிவேட்டில் பதிவு செய்திட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுக்கும், தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment