பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, July 30, 2016

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு 31-12-2009 முடிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் - திருத்தம் வெளிடயிடப்பட்டுள்ளது.



மாநகராட்சி பள்ளிகளுக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் - கருத்துருக்களுடன் அனுப்ப வேண்டிய சான்றுகள். - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.


காலியாக இருந்த 41 DEEO, DEO பணியிடங்களுக்கு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.








கடந்தாண்டு மாறுதலில் சென்ற AAEEOக்களின் பணிப்பதிவேட்டினை அனுப்பிடாமல் உள்ள விழுப்புரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவருக்கு பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதம்.



Friday, July 22, 2016

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பயணப்பட்டியல் நிலுவை சார்ந்த விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

               உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் TA நிலுவையில்லா ஆண்டாக அறிவிக்க கோரிய மாநில பொதுக்குழு தீர்மானம் 14-ன்படி மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் கீழ்க்கண்ட விபரப்படி பயணப்படிகள் விவரம் கோரியுள்ளார்.
            நமது கோரிக்கையினை நிறைவேற்றித்தர ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ள மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
           மேலும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பயணப்படி நிலுவை விபரங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் வழியாக தொகுத்து விரைவாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம்.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் பொதுச்செயலாளர் சந்திப்பு.

          தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை 21-07-2016 அன்று தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்களும் மாநில இணைச்செயலாளர்                  இரா. தமிழ்ச்செல்வனும் சந்தித்தனர்.
         உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான நடப்பாண்டு  மாறுதல் கலந்தாய்வில் பணியாற்றிய ஒன்றியத்திற்கு மீள மாறுதல் கோரிட வாய்ப்பளித்தல், கடந்தாண்டு மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் இந்தண்டு கலந்தய்வில் பங்கேற்க அனுமதித்தல், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேர்வுநிலை வழங்குவதில் சாதாரண விதிமுறைகூட தெரியாது செயல்படும்  ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு உரிய அறிவுரை வழங்கிடுதல் ஆகிய  கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பி.பெஞ்சமின் அவர்களுடன் பொதுச்செயலாளர் சந்திப்பு.



     தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு..பி.பெஞ்சமின் அவர்களை சந்தித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது குறித்து கோரிக்கை மனுவினை அளித்து பேசினார். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று முடிவெடுப்பதாக உறுதியளித்ததார். அப்போது மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.



Monday, July 18, 2016

தொடக்கக்கல்வித்துறை - 2016 - 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பம் வெளிடப்பட்டது.







உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பொதுமாறுதல் விண்ணப்பம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

           உதவி தொடக்கக்கல்வி  அலுவலர்களுக்கான 2016-2017 ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எதிர்வரும் 0307-2016 அன்று இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.
            தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் 31-08-2016 அன்று மூன்று ஆண்டுகள் முடிவடையும் அலுவலர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்திட வேண்டும்.
                ஏற்கனவே பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க கூடாது.



பொதுச்செயலாளர் அவர்களின் மகன் Dr. பா. ராம் பிரசாந்த் அவர்கள் இன்று (18-07-2016 ) தனது 25 வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் சிறப்பாக கொண்டாடினார். நீண்ட ஆயுளுடன் மருத்துவத் துறையில் புகழ்பெற்றிட தம்பி பிரசாந்த் அவர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.





Friday, July 15, 2016

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் - இயக்குநர்களுடன் சந்திப்பு.

            செஞ்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன். பொருளாளர் ப.மாதவராஜ், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன். தலைமை நிலையச் செயலாளர் மு.இராஜேந்திரன், மகளிர் அணிச்செயலாளர் ச.இந்திராதேவி மற்றும் மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் சென்னையில் இயக்குநர்களை சந்தித்து வாழ்த்துகள்  பெற்றதோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றித்தர வலியுறுத்தி பேசினார்கள் .

தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சி.பாஸ்கரன் அவர்கள் 
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர்  அவர்களின் 
 வாழ்த்துகளை பெற்றபோது.

   மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன்
பொதுக்குழு தீர்மானங்களான ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக செயல்பாடுகள், பயணப்பட்டியல் நிலுவை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது சுமத்தப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து தீர்வுகாணுதல், நேரடி நியமன AEEOக்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், அலுவலக காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்தல், அனைத்து மாவட்டங்களுக்கும் மழலையர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

 கடந்தாண்டு விடுபட்டுள்ள 3 உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை இந்தாண்டு சேர்த்து பதவி உயர்வு வழங்கிட கோரும் பொதுக்குழு தீர்மானத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

           தொடர்ந்து பாடநூல் மற்றும் கல்வியியல் கழக செயலாளர்  அவர்களை சந்தித்து விலையில்லா பொருள்கள் புள்ளிவிவரங்கள் அனுப்பிட ஏதுவாக உதவி தொடக்கக்கல்வி அலுலவகங்களுக்கு கணினி, அச்சுப்பொறி, இணையதள இணைப்பு, மேசை, நாற்காலி ஆகியவை வழங்கவும், மற்றும் பாடபுத்தகம், குறிப்பேடுகளை விநியோகிக்க ஒன்றிய அளவில் நோடல் மையங்களை அமைத்திடவும் வலியுறுத்தி பேசப்பட்டது. உடன் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளனர்.

 

தலைமைச்செயலாக மேனாள் தலைவர் திரு பீட்டர் அந்தோணிச்சாமி அவர்கள் தலைமைச்செயலக வளாகத்தில் மாநில நிர்வாகிகளுடன்.