பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, December 6, 2016

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது.தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.


    
        தமிழ்பேசும் நல்லுலகம் அம்மா என்று அன்புடன் அழைக்கும்  தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள்  05-12-2016 அன்று இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்திய செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் பிரார்த்தனை செய்கிறது. அவர் விட்டுச்சென்ற பணி தொடந்து நடத்திட தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்.

Thursday, November 24, 2016

நிலுவையில் உள்ள பயணப்படி நிலுவைத்தொகை 15-12-2016 க்குள் வழங்கிட தற்போது தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

                 கடந்த 06-11-2016 அன்று சென்னை தாம்பரம் மாநில செயற்குழு தீர்மானத்தினை அடுத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி நிலுவை நீண்டகாலமாக இருப்பதால் அதனை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் 07-11-2012 அன்று சென்னையில் நேரில் மாநில நிர்வாகிகளால் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று தற்போது மாவட்டங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ள தொகையினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உடன் பயணப்பட்டியல் நிதி ஒதிக்கீடு அனுமதித்து கூடுதல் தேவை குறித்த விபரங்களை 15-12-2016க்குள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பட்டியல் அனுப்பிட மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களை தொடர்புகொண்டு விபரங்களை எடுத்துக்கூறி தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பெறுவதுடன், கூடுதல் தேவை பட்டியல் தொடக்கக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிர்வாக மான்யம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின்கட்டணம், 25 வருட மாசற்ற பணியாற்றுவர்களுக்கு பணப்பரிசு ஆகியவற்றிற்கும் கூடுதல் தேவை கோரப்பட்டுள்ளது.





Wednesday, November 9, 2016

தாம்பரம் பேபி உயர்நிலைப்பள்ளியில் 06-11-2016 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு காட்சிகள்.



















தாம்பரம் பேபி உயர்நிலைப்பள்ளியில் 06-11-2016 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.



தீர்மானம்: 1
உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு சில்லரைச் செலவினமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2000/ம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.   இதனை குறைந்த பட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000/-ஆக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்திட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை கோருவது எனத்  தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்: 2
பிற ஒன்றியங்களுக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் சிறப்புப் பார்வைக்காக செல்லும் போது மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்படாமல் சில மாவட்டங்களில் ஒரே நாளில் நான்கு பள்ளிகள் பார்வையிட வேண்டுமெனவும், சில மாவட்டங்களில் இரண்டு பள்ளிகள் பார்வையிட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறையாக இருக்கும் வகையில் ஒரு நாளில் இரண்டு பள்ளிகளை முழுமையாக  சிறப்புப் பார்வையிட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தக்க  தெளிவுரை வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் சிறப்புப்பார்வைக்கு செல்லும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி அந்தந்த மாதத்திலேயே வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம்: 3
உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களில் ஆசிரியர் வருங்கால வைப்புநிதி கணக்குகள் 31.03.2014 அன்றைய தேதி வரை மாவட்டங்களில் உள்ளாட்சி தணிக்கை செய்யப்பட்டு உதவி இயக்குநர் அவர்களால் இறுதி இருப்புத்தொகை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகையை ஆரம்ப இருப்பாகக் கணக்கில் கொண்டு ஆசிரியர்களுக்கு முன்பணம் / பகுதி இறுதித்தொகை அனுமதிப்பது போல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் / பகுதி இறுதித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.  ஆனால் இராமநாதபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மட்டும் அனுமதிக்க மறுப்பதால் அவருக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெளிவுரை வழங்கிட கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை அவமரியாதையாக நடத்தும் பொறுப்பு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரையும், அவருக்கு துணையாக இருக்கும் அவ்வலுவலக கண்காணிப்பாளர் திரு.என்.டி.சுப்ரமணியன் அவர்களை மாநில செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது. 
தீர்மானம்: 4
          தமிழகத்தில் உள்ள 413 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் முதலிய (இணைப்பில் கண்ட பட்டியலில் உள்ள) காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 5
          ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் முன்னுரிமையை  நிர்ணயம் செய்யும் போது அவர்களின் தரஎண் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்திட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை கேட்டுக்கொள்வது என  தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 6
நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக  இருந்து பணிமாறுதலில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர்களுக்கு தனியாக ஊதிய நிர்ணயம் ஏதும் செய்யப்படாத நிலையில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணிக்காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவது மாநிலம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மட்டும் மறுப்பது இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு உரிய தெளிவுரை வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 7
          நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து பணிமாறுதலில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர்கள் தங்களது உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டி விண்ணப்பிக்கும் போது கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மட்டும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க மறுப்பதால் அவருக்கு உரிய தெளிவுரை வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 8
          உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் இருந்து கருவூலங்களுக்கு கேட்புப்பட்டியல் அனுப்பும் போது CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு உரிய தொகை பிடித்தம் குறித்த படிவம் மாதாந்தோறும் முறையாக இணைத்து அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில புள்ளிவிவர மையத்திலிருந்து தொகை செலுத்திய விபரம் விடுபட்டுள்ளது என பெரும் எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கூறி, விடுபட்ட பதிவுகளை பதிவேற்றம் செய்தால் மட்டுமே ஊதியப் பட்டியலை ஏற்க இயலும் என கருவூல அலுவலர்கள் நிர்பந்திப்பதால் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிகழ்வு மாநில புள்ளி விவர மையத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததால் ஏற்படுகிறது. எனவே விடுதல் இன்றி முறையாக பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசு புள்ளி விவர மைய ஆணையர் அவர்களைக் கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 9
பல மாவட்டங்களில் 2008-2009 முதல் இன்றுவரை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயணப்படி நிலுவையில் உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள நிலுவை பயணப்பட்டியல் தொகை ரூ. 2,00,00,000/-யை இந்த நிதியாண்டில் பெற்று வழங்கி TA நிலுவையில்லா ஆண்டாக அறிவிக்க கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.


இரா.இரவிச்சந்திரன்         இரா.தமிழ்ச்செல்வன்                   .மாதவராஜன்
மாநிலத் தலைவர்    மாநில பொதுச்செயலாளர்(பொ)    மாநில பொருளாளர்