பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, December 24, 2015

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு.

          நமது சங்கத்தின் சார்பில்  தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், பொருளாளர் ப.மாதவராஜன், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சென்னையில் 23-12-2015 அன்று சந்தித்தனர். அப்போது 2015-2016 ஆம் ஆண்டுக்கு விலையில்லா புத்தகங்கள் நோடல் மையத்திலிருந்து ஒன்றியத்திற்கு எடுத்து சென்றதற்கான லாரி வாடகை விரைவில் வழங்கிடவும்,  குறிப்பேடு வழங்கியதற்கான தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் விரைவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிடவும், திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பயணப்படி நிலுவையில் உள்ளதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திடவும் கோரப்பட்டதோடு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே இந்த நிதியை பயன்படுத்திக் கொள்வதால் நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கரூர் போன்று சில மாவட்டங்களில் காலியாக உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
                உடனே  மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் 28-12-2015 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திற்கு கொண்டுவரவும், பெறப்பட்ட காசோலை வழங்கப்பட்ட விபரத்தையும் கொண்டுவரவும் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவித்திட பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். திருந்திய நிதிமதிப்பீட்டில் பயணப்படிக்கு கூடுதல் நிதி பெற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.மேலும் மாநில செயற்குழுவில் விவாதித்த பொருள்கள் பற்றியும், மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொடக்ககக்கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசப்பட்டது. எனவே மாவட்டச் செயலாளர்கள் மாவட்டங்களில் குறிப்பேடு பெற்று வழங்கியமைக்கான காசோலை விரைந்து பெற்றிடவும், பயணப்படி கூடுதல் தொகை தேவை விபரத்தை அனுப்பிட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பட்டியலை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.
           மாற்றுத்திறனாளிகள் சார்பில் நேரடி நியமனத்தில் 3% உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணிவாய்ப்பு கோருவதால் காலதாமதம் ஆகிவருவது அறியப்பட்டது. இதனை விரைந்து முடிவுக்கு கொண்டுவந்து காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.
           மேலும் தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் செயலர் மதிப்பிற்குரிய இயக்குநர் கார்மேகம் அவர்களை நேரில் சந்தித்து 2015-2016 ஆம் ஆண்டுக்கு விலையில்லா புத்தகங்கள் நோடல் மையத்திலிருந்து ஒன்றியத்திற்கு எடுத்து சென்றதற்கான லாரி வாடகைக்கான நிதியை ஒதுக்கிட செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விரைந்து வழங்கிட கோரப்பட்டது. தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் பெறப்பட்டுள்ளதால் விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.



Tuesday, December 15, 2015

2016 ஆம் ஆண்டு நாட்குறிப்பில் தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர்கள் இடம் பெற கீழே உள்ள பட்டியலை உடன் மாவட்ட செயலாளர்கள் கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு அனுப்பிடவும். மிக அவசரம்.

      மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்கள் விபரங்களை கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளபடி உடன் அனுப்பிட கோரப்பட்டது. இன்னும் பல மாவட்டங்கள் அனுப்பவில்லை. இதனால் நாட்குறிப்பு பணி முடிக்க இயலவில்லை. எனவே haribalakrishnanc@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு உடன் அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம். புகைப்படங்களை ஸ்கேன் செய்யும் போது JPEG File ஆக Resolution (DPI)  அதிகமாக ஸ்கேன்  செய்து அனுப்பிட வேண்டும்.  காலதாமதமாக அனுப்பி, அதனால் நாட்குறிப்பில் புகைப்படம், பட்டியல் வெளியிட இயலாமல் போனால் வருத்தமடையக்கூடாது. எனவே உடன் செயல்பட மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

        ஒவ்வொருவராக தனித்தனியாக புகைப்படம் அனுப்பினால் குழப்பம் ஏற்படும். எனவே மாவட்ட வாரியாக மொத்தமாக அனுப்பிடவும்.
               
                      கீழ்கண்ட முகவரிக்கும் கூரியர் மூலம் அனுப்பிடலாம்

                                   C. HARIBALAKRISHNAN
                                   No. 17, SUNDARAVEL COMPLEX
                                   PKN ROAD
                                   SIVAKASI
                                  MOBILE No. 9894083129
              
மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக AEEO, AAEEO's பட்டியல் அனுப்பிட வேண்டிய மாவட்டங்கள்.
               சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தர்ம்புரி, நீலகிரி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல் மற்றும் புகைப்படம் அனுப்ப வேண்டிய மாவட்டங்கள்:
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இரமநாதபுரம், நகை, திருவாரூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, மதுரை, வேலூர், திருவண்ணாமலை,  ஆகிய மாவட்டங்கள்  தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் அனுப்பிட வேண்டும்.

Tuesday, December 8, 2015

2014 - 2015 கல்வி ஆண்டில் குறிப்பேடுகள் எடுத்துச்சென்றதற்கான போக்குவரத்துச் செலவினம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு காசோலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காசோலை பெறப்பட்ட உடன் பயன்பெற்றிட அறிவிக்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி - மழை வெள்ளம் பாதிப்பு -பள்ளிகள் திறப்பு - ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளுதல் - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க அரையாண்டுத் தேர்வுகள் சனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Monday, December 7, 2015

இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது.

        தனி ஊதியம் ரூ.750 ஐ எடுத்து ஊதிய நிர்ணயத்திற்கு கணக்கிட்டுவிட்டு தொடர்ந்து அடிப்படை ஊதியத்துடன் ரூ.750ஐ இணைத்து ஊதியம் நிர்ணயம் சில மாவட்டங்களில் செய்துள்ளதால் 01-01-2011க்கு முன் பதவி உயர்வில் சென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது என நிதித்துறை அரசு கடிதம் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

 அரசுக்கடிதத்தினை பதிவிறக்கம் செய்திட=====>




Sunday, December 6, 2015

அடாத மழையிலும் எழுச்சியுடன் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு.

           தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 06-12-2015 திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் மாநில தலைவர் இரா.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து புதியதாக மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற இச்செயற்குழுவில் 24 மாவட்டங்களில் இருந்து 100க்கும் அதிகமான பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி மார்ட்டின் வரவேற்புரை ஆற்றினார். 
              24 மாவட்டங்களைச்சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்திடுவது, நீதிமன்ற வழக்கு தொடர்பாக அலுவலர்கள் படும் துயரம், நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பயணப்படி நிலுவை, அரசாணைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறுவிதமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் முடிவு எடுப்பது, பி.எப். கணக்குத்தாளை பயன்படுத்துவது, இணையதளவசதி ஏற்படுத்தித்தருவது ஆகியவை தொடர்பாக கருத்துகளை தெரிவித்தனர்.
                தொடர்ந்து பேசிய மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் நீதிமன்ற வழக்கு, மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக இதுவரை மாநில அமைப்பு எடுத்துவரும் நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள், குறிப்பேடுகள் பெற்று வழங்கியமைக்கு 2 ஆண்டுகளுக்கு நிலுவையில் உள்ள லாரி வாடகை தற்போது பெறப்பட்டுள்ளது, வழக்கு சார்ந்து அலுவலர்கள் படும் வேதனைகள் தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து பேசினார்.
                   மாநில பொருளாளர் ப.மாதவராஜன் சங்க வரவு-செலவினை வாசித்து நிலுவை வழங்க வேண்டிய மாவட்டங்கள் விரைவில் வழங்கிட கூறினார். மாநில இணைச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் சங்க நிகழ்வுகளை பற்றி பேசி நன்றியுரை கூறினார். முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவாற்றப்பட்டது. 
















Friday, December 4, 2015

06-12-2015 அன்று மாநில செயற்குழு திட்டமிட்டபடி திருச்சியில் நடைபெறும். பொதுச்செயலாளர் அறிவிப்பு.

           தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. எனவே பொருப்பாளர்கள் அனைவரும் தவறாது 2016-நாட்குறிப்பில் வெளியிட ஏதுவாக மாவட்ட பொறுப்பாளர்கள் புகைப்படம் ஒட்டிய படிவத்துடனும், மாவட்டத்தில் பணிபுரியும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பட்டியலுடன் வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையாளராக செயல்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் படிவங்களை மாநில செயற்குழுவில் ஒப்படைத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள்.

         மாநில செயற்குழு முடிவின்படி புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினார். பொருப்பாளர்கள்  அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட பொறுப்பாளர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்கள் வாழ்த்தி பேசியதுடன் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை பற்றியும், பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.

மாவட்ட தலைவர்                              : மு.முத்துக்குமார்.
மாவட்ட செயலாளர்                         : வெ.வீரையா.
மாவட்ட பொருளாளர்                      : செ.செங்குட்டுவன்.
மகளிர் அணிச்செயலாளர்             : சு.உமாதேவி.
மாநில செயற்குழு உறுப்பினர்     : இரா.மகேஸ்வரன்.