பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Thursday, December 24, 2015

மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு.

          நமது சங்கத்தின் சார்பில்  தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், பொருளாளர் ப.மாதவராஜன், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சென்னையில் 23-12-2015 அன்று சந்தித்தனர். அப்போது 2015-2016 ஆம் ஆண்டுக்கு விலையில்லா புத்தகங்கள் நோடல் மையத்திலிருந்து ஒன்றியத்திற்கு எடுத்து சென்றதற்கான லாரி வாடகை விரைவில் வழங்கிடவும்,  குறிப்பேடு வழங்கியதற்கான தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் விரைவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிடவும், திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பயணப்படி நிலுவையில் உள்ளதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திடவும் கோரப்பட்டதோடு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே இந்த நிதியை பயன்படுத்திக் கொள்வதால் நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கரூர் போன்று சில மாவட்டங்களில் காலியாக உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
                உடனே  மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் 28-12-2015 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திற்கு கொண்டுவரவும், பெறப்பட்ட காசோலை வழங்கப்பட்ட விபரத்தையும் கொண்டுவரவும் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவித்திட பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். திருந்திய நிதிமதிப்பீட்டில் பயணப்படிக்கு கூடுதல் நிதி பெற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.மேலும் மாநில செயற்குழுவில் விவாதித்த பொருள்கள் பற்றியும், மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொடக்ககக்கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசப்பட்டது. எனவே மாவட்டச் செயலாளர்கள் மாவட்டங்களில் குறிப்பேடு பெற்று வழங்கியமைக்கான காசோலை விரைந்து பெற்றிடவும், பயணப்படி கூடுதல் தொகை தேவை விபரத்தை அனுப்பிட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பட்டியலை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.
           மாற்றுத்திறனாளிகள் சார்பில் நேரடி நியமனத்தில் 3% உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணிவாய்ப்பு கோருவதால் காலதாமதம் ஆகிவருவது அறியப்பட்டது. இதனை விரைந்து முடிவுக்கு கொண்டுவந்து காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.
           மேலும் தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் செயலர் மதிப்பிற்குரிய இயக்குநர் கார்மேகம் அவர்களை நேரில் சந்தித்து 2015-2016 ஆம் ஆண்டுக்கு விலையில்லா புத்தகங்கள் நோடல் மையத்திலிருந்து ஒன்றியத்திற்கு எடுத்து சென்றதற்கான லாரி வாடகைக்கான நிதியை ஒதுக்கிட செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விரைந்து வழங்கிட கோரப்பட்டது. தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் பெறப்பட்டுள்ளதால் விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.



No comments:

Post a Comment