பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, October 20, 2015

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட் - தினமலர்

          சென்னை: ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Sunday, October 18, 2015

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் முடிவுகள்.

                 நமது சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தேர்தல்  திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 17-10-2015 அன்று  பொதுச்செயலாளர் திரு.சு.பாஸ்கர் அவர்கள் தேர்தல் அலுவலராக இருந்து நடத்தினார். புதிய பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 தலைவர்                                          : மு.தணிக்காச்சலம்
 செயலாளர்                                      : தே.வீர்ராகவன்
 பொருளாளர்                                   : அ.ச.குமார்
  மகளிர் அணி செயலாளர்         :ஜோ.மேரி ஜோஸ்பின்
மாநில செயற்குழு உறுப்பினர்:எ.குருநாதன்.






சேலம் மாவட்ட தேர்தல் : நாள் 18-10-2015
 சேலம் மாவட்ட தேர்தல் மாநில பொருளாளர் திரு. மாதவராஜன் அவர்கள்  தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து நடத்தினார்.





Sunday, October 11, 2015

மாநில செயற்குழு முடிவின்படி தேர்தல் ஆணையாளர்கள் திருப்பூர், வேலூர், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்கள்..

விழுப்புரம் மாவட்டம்:
                 விழுப்புரம் மாவட்ட தேர்தல் 11-10-2015 முற்பகல் இன்று விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  தேர்தல் ஆணையாளர் பொதுச்செயலாளர் சு. பாஸ்கர் அவர்கள் தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி சங்கத்தின் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

தலைவர்                                             : பி.ஸ்ரீராமுலு.
செயலாளர்                                         : இரா. பொய்யாமொழி.
பொருளாளர்                                      : தே.கருணாநிதி.
மகளிரணிச்  செயலாளர்              : என்.தேன்மொழி.
மாநில செயற்குழு உறுப்பினர்  : கே.அந்தோணிராஜ்.
                                                     :  எஸ். ஏழுமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  வேலூர் மாவட்டம்:

       வேலூர் மாவட்ட தேர்தல் 11-10-2015 இன்று ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேர்தல் ஆணையாளர் மாநில பொருளாளர் ப.மாதவராஜ் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர்  சு.ரமேஸ் ஆகியோர் நடத்தினார்கள். மாநில பொருளாளர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்.

தலைவர்                                  : பெ..வெங்கடாச்சலம் 
செயலாளர்                             :  இரா. கோவிந்தராஜ்
பொருளாளர்                          : பிரசாந்த்
மகளிரணிச்  செயலாளர்  : கோமதி
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :
                                       1.இரா. கதிரவன்
                                       2.     கமலநாதன்
                                       3.ஏ. வேணுகோபால் 
                                       4. இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை மாவட்டம்:

             சென்னை மாவட்ட தேர்தல் 10-10-2015 அன்று புரசைவாக்கம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் விழுப்புரம் மண்டலச்செயலாளர் சி. ஆக்சிலியம் பெலிக்ஸ் தேர்தலை நடத்தினார். புதிய பொருப்பாளர்களை மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ், கே.சங்கர் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் எஸ். இந்திராதேவி ஆகியோர் வாழ்த்தினார்கள் .

தலைவர்                                             : லூ.வின்சென்ட் கிளாரா.
செயலாளர்                                         : க.ரெங்கராசு.
பொருளாளர்                                      : ந.த.சண்முகம்.
மகளிரணிச் செயலாளர்               : க.தமிழ்ச்செல்வி
மாநில செயற்குழு உறுப்பினர்  : எம்.சி.ஆறுமுகம்.
 





திருப்பூர் மாவட்டம்:

 திருப்பூர் மாவட்ட தேர்தலை 04-10-2015 அன்று கோவை மண்டல செயலாளர் கு.கேசவன் அவர்கள் நடத்தினார். மாநில மகளிரணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி புதிய பொருப்பாளர்களை பாராட்டினார்.

தலைவர்                                             : சி.ஜஸ்டின் ராஜ்.
செயலாளர்                                         : கோ.சுப்பிரமணியன்.
பொருளாளர்                                      : கு.மனோகரன்.
மகளிரணிச்  செயலாளர்             : கு.சின்னக்கண்ணு
மாநில செயற்குழு உறுப்பினர்  : எஸ். விஸ்வநாதன்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.





Sunday, October 4, 2015

காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் - மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

                மாநில செயற்குழு முடிவின்படி இன்று 04-10-2015  காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் திருண்ணாமலை மாவட்ட தலைவர் பி. துரை அரசு அவர்களும், பார்வையாளர் மாநில துணைச்செயலாளர் சென்னை சு. ரெங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார்கள். மாவட்ட தலைவராக திரு.சூ.சார்லஸ் பீட்டர் அவர்களும், செயலாளராக சொ. சிவசங்கரன் அவர்களும், பொருளாளராக சு.ரமேஷ் அவர்களும்,  மாவட்ட மகளிரணி செயலாளராக வி.லேகா அவர்களும்,  மாவட்ட செயற்குழு உறுப்பினராக எ.பச்சையப்பன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



Friday, October 2, 2015

நமது பொதுச்செயலாளர் அவர்களின் மூத்த சகோதரர் இரவிக்குமார் அவர்கள் இன்று ( 02-10-2015) இயற்கை எய்தினார்.

        

                

              இன்று பகல் 12 மணியளவில் திருவாளர் இரவிக்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் சங்கம் அன்னாரை இழந்து வாடும் பொதுச்செயலாளர் திரு.சு.பாஸ்கர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. திருவாளர் இரவிக்குமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். நமது சங்கத்தின் சார்பில் மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சொ.சிவசங்கரன், சூ.சார்லஸ் பீட்டர், க.ரமேஸ் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.