பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, May 30, 2014

RMSA திட்ட இயக்குநர் பணி ஓய்வு - மாநில பொதுச்செயலாளர் நேரில் பாராட்டு!



RMSA திட்ட இயக்குநர் மதிப்புமிகு முனைவர் சங்கர் அவர்கள் 31-05-2014 அன்று பணி ஒய்வு பெறுவதால் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் நேரில் பாராட்டினார்கள்.

Thursday, May 29, 2014

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

              கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏழு ஆசிரியர்கள், 2010க்கு முன், பணியில் சேர்ந்ததாக, பதிவேடு தயாரித்து, பணிநியமனம் முறைகேடாக நடந்தது. இதில், கல்வி அதிகாரிகளுக்கு, தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு, விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில், ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, வால்பாறை உதவி கல்வி அதிகாரி காளிமுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிமீறி, பணியில் சேர்ந்த ஆசிரியர் கள் ஏழு பேரிடமும் விளக்கம் கேட்டு, கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''முதல்கட்ட விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் கட்ட விசாரணை முடிவுகள் கிடைத்தபின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Wednesday, May 28, 2014

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் - மாண்புமிகு முதல்வர் உத்தரவு



சென்னை, மே.28-
ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்திட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் ஜூன் 2-ந்தேதியே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் 2014-15-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்களான விலையில்லா பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, சீருடை ஆகியவை பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ந்தேதி அன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி, சைக்கிள், கிரையான், கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், புத்தகப்பை, காலணி, பேருந்து பயண அட்டை, சாதி, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல், கம்பளி ஆடை (மலைப்பகுதி மாணவர்களுக்கு மட்டும்), சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
முதல்-அமைச்சர் ஆணைப்படி, மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மழை நீர் சேகரிப்பு சார்பாக விழிப்புணர்வு ஊர்வலங்கள் மாவட்டம் தோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஜூன் 2-வது வாரம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ) அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
100 சதவீதம் தேர்ச்சி
2013-14-ம் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. 2014-15-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து மேற்கண்ட தேர்ச்சி சதவீதத்தை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அறிவுரை வழங்க வேண்டும்
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி தரத்தை உயர்த்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், அரசு தேர்வுத் துறை இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TPF கணக்குகளை 31-03-2014 வரை இறுதி இருப்பு தொகை AGயிடம் ஒப்படைத்தல்- தொ.க.இயக்குநர் உத்தரவு.

Friday, May 23, 2014

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கருணையால் அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களான AEEO-க்களின் சாதனை.

     மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கருணையால் அரசாணை 182 நடைமுறைப்படுத்தப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்ற AEEO-க்கள் தங்களது பள்ளியின்  தேர்ச்சி விழுக்காட்டில் சாதனை படைத்துள்ளனர். பணியேற்று 5 மாதங்களே ஆன நிலையில் இச்சாதனையை படைத்துள்ளனர். அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
                     AEEO பெயர்          -  தேர்ச்சி விழுக்காடு

1. திரு.கே.சுதந்திரன்              - 100%
2.திரு.எ.ஆரோக்கியசாமி    - 100%
3.திரு.ஆர். நாகராஜன்           -  98%
4.திரு.இ.ஜெயலதா                - 98%
5.திரு.கே.ராஜ மாரீஸ்          - 98%
6.திரு.ஆர்.தாமோதரன்         - 85 %

ஏ.இ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல் - தினமணி நாளிதழ் செய்தி


       நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சங்கத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் கூறியது:
      நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுகள் எழுதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி நியமனம் பெறுகின்றனர்.ஆனால், அவர்களுக்கு இந்தப் பணியிடம் மாற்றுப்பணியிடமாகவே கருதப்படுகிறது.
      உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒன்றிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுகிறார். ஆனால், அவருக்கும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படுகிறது.
      நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை மாற்றுப் பணியாகக் கருதுவதற்குப் பதிலாக, பதவி உயர்வு பணியிடமாகக் கருத வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று உடனடியாக இந்தப் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும். உரிய ஆணை வழங்க மேலும் கால தாமதமானால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளோம்.
        அதேபோல், ஒன்றிய அளவில் மாதத்துக்கு 25 பள்ளிகளை ஆய்வு செய்யும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயணப் படி வழங்குவதில் சரியான விதிகள் பின்பற்றப்படுவதில்லை.அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பயணப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார்.

உபரி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல், மா.தொ.க.அலுவலர்களுக்கு சென்னையில் 3 நாள் கூட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.


ஏற்காட்டில் 18-05-2014 அன்று நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானங்கள்.

ஏற்கனவே வைத்துள்ள இலவச பேருந்து பயண அனுமதி சீட்டுகளை 2014 ஆகஸ்ட் வரை மாணவர்கள் பயன்படுத்திட இயக்குநர் உத்தரவு

Monday, May 19, 2014

01-06-2014 ன்படி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப்பட்டியல்

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் 01.06.2014 ன்படி மாநில அளவிலான முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது.

சேலம் ஏற்காட்டில் 18-09-2014 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு காட்சிகள்:


                          மாநில தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்                         சேலம் மண்டலச்செயலாளர்
மாநிலப் பொருளாளர் சங்கத்தின்  வரவு - செலவு அறிக்கையினை வாசித்து பொதுக்குழுவின் ஒப்புதல் பெறுகின்றார் 
மாநிலப் பொதுச்செயலாளர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசுகின்றார்.

 மாநில நிர்வாகிகள் பொதுக்குழு தீர்மானங்களை விவாதிக்கின்றனர்

 பொதுக்குழுவில் கலந்து கொண்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்


பொதுக்குழுவில் கலந்து கொண்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்






Friday, May 9, 2014

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர், வெங்கடேசன் என்பவர், தாக்கல் செய்த மனு: பெரும்பாலும், தனியார் பள்ளிகள் தான், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை நடத்துகின்றன. இந்தப் பள்ளிகள் எல்லாம், கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், பெற்றோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சமச்சீர் கல்வி, தரமான கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், தனியார் பள்ளிகள், தாங்களாகவே பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்கின்றன. எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு கூட, சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில், ஆறாவது வயதில் இருந்து தான் குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில், மூன்று வயதில் இருந்தே குழந்தைகளை சேர்க்கின்றனர்.
குழந்தைகளின் மனநிலை, உடல்தகுதி மேம்பாட்டுக்கு, நடவடிக்கை எடுக்க, அரசு தவறி விட்டது.
சென்னை மாநகராட்சி மேயர், 25 மழலையர் பள்ளிகளை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே, இந்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் சுதாகர், சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க, அரசுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. - தினமலர் செய்தி

Friday, May 2, 2014

பணிஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மகாதேவனுக்கு பொதுச்செயலாளர் பாராட்டு.


தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணியாற்றி  30-04-2014 அன்று பணிஓய்வு பெற்ற இருக்கை கண்காணிப்பாளர் திரு.மகாதேவன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவில்  பொதுச்செயலாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். உடன் இருப்பவர் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிவீரபாண்டியன் .