பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, February 24, 2016

2013 - 2014 ஆம் கல்வியாண்டில் குறிப்பேடுகள் பெற்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான போக்குவரத்து செலவினம் வழங்கிட நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.

                      திருச்சியில் நடைபெற்ற  தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுவில் அறிவித்தபடி மாநில அமைப்பால் 2013 - 2014 ஆம் கல்வியாண்டில் குறிப்பேடுகள் பெற்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான போக்குவரத்து செலவினம் வழங்கிட அரசிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் காசோலையாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய உடன் உரிய தொகையினை மாவட்டங்களில் வழங்கப்படும். மாநில பொதுச்செயலாளர் எஸ். பாஸ்கரன் அவர்கள் தொடர் முயற்சியால் நமது கோரிக்கை நிறைவேறியுள்ளது.





Monday, February 8, 2016

கல்வித்துறைச் துணைச்செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் இணைச்செயலாளராக பதவி உயர்வு


   சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் துணைச்செயலாளராக பணியாற்றும் திரு செல்வராஜ் அவர்களுக்கு இணைச்செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிசிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

Saturday, February 6, 2016

29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு.

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

29 பேருக்கு பதவி உயர்வு

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-

யு.பரமசிவம்- மாவட்ட கல்வி அதிகாரி, புதுக்கோட்டை. சி.ரங்கராஜ்- உதவி இயக்குனர் (சுற்றுச்சூழல்) பள்ளிக்கல்வி இயக்குனரகம், சென்னை. ஆர்.சந்தியா- மாவட்ட கல்வி அதிகாரி, அறந்தாங்கி. எம்.முனிராஜ்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, தர்மபுரி. பி.மாணிக்கம்-மாவட்ட கல்வி அதிகாரி, சிவகங்கை. வி.ஹரி மூர்த்தி- மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சேலம்.

எஸ்.சின்னப்பெண்-மாவட்ட கல்வி அதிகாரி, தேவக் கோட்டை. எஸ்.நடராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, குன்னூர். ஏ.மாரிமுத்து- மாவட்ட கல்வி அதிகாரி, திருநெல்வேலி. கே.துரைசாமி- மாவட்ட கல்வி அதிகாரி, கோபிச்செட்டிப்பாளையம். பி.சிவானந்தம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, வேலூர். டி.ஆறுமுகம்- மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, ஈரோடு. ஜே.நாகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, பெரியகுளம். சி.அமுதா-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, சென்னை.

மதுரை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்

பி.ஸ்ரீனிவாச மூர்த்தி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை. சி.பி.மகராஜன்- மாவட்ட கல்வி அதிகாரி, ஈரோடு. வி.ராஜேந்திரன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, திருப்பூர். டி.லோகநாதன்-மாவட்ட கல்வி அதிகாரி, திருப்பூர். ஆர்.கனிமொழி- மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், ஈரோடு. அ.நசருதீன்-மாவட்ட கல்வி அதிகாரி, பொள்ளாச்சி. எம்.உசேன்கான்- மாவட்ட கல்வி அதிகாரி, ராமநாதபுரம். டி.மோகன்குமார்-மாவட்ட கல்வி அதிகாரி, பரமக்குடி.

கோவை

கே.பி.மோகன்-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, கரூர். டி.சரோஜா-மாவட்ட கல்வி அதிகாரி, திருவாரூர். சி.ராஜசேகரன்- மாவட்ட கல்வி அதிகாரி, கூடலூர்(நீலகிரி). கே.சி.சாந்தகுமார்-மாநகராட்சி கல்வி அதிகாரி, கோவை. ஏ.குயின் எலிசபெத்-மாவட்ட கல்வி அதிகாரி, முசிறி. ஆர்.இந்திராகாந்தி-மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, நாமக்கல். வி.விஜயலட்சுமி-மாநகராட்சி கல்வி அதிகாரி, மதுரை.

Wednesday, February 3, 2016

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சென்னை மாவட்டக் கிளை சார்பில் பணிஓய்வு பெற்ற மயிலை AAEEO கு.சங்கர் அவர்களுக்கு பாராட்டு விழா.

          தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சென்னை மாவட்டக் கிளை சார்பில் கடந்த 31-01-2016 அன்று பணிஓய்வு பெற்ற மயிலாப்பூர் சரக கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கு.சங்கர் அவர்களுக்கு சென்னையில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு. ஜோஸ்வா ஜான்சன் அவர்கள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். மாவட்டத் தலைவர்  லு.வின்சென்ட் கிளாரா தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில துணைச்செயலாளர் சு.ரெங்கராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில்  மாவட்ட செயலாளர் ந.த.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆறுமுகம்,  மகளிரணி செயலாளர்  கே.தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில மகளிரணிச் செயலாளர் எஸ்.இந்திராதேவி நன்றியுரை ஆற்றினார்.







Tuesday, February 2, 2016

நமது சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை AEEOக்களுக்கு ரூ.4800 தர ஊதியம் வழங்கி உத்தரவிட்டுள்ள தீர்ப்பின் நகல்



செயற்குழுவில் மாநில அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கை.





செங்கல்பட்டில் 31-01-2016 அன்று நடைபெற்ற ஆறு மாவட்டங்கள் பங்கேற்ற மண்டலமாநாடு மற்றும் மாநில செயற்குழு கூட்டம்

              தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற மாநில செயற்குழு கூட்டம் செங்கல்பட்டில் 31-01-2016 அன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பேற்று நடத்திய இக்கூட்டத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் சொ.சிவசங்கரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் இரா.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4800 தர ஊதியம் உயர்த்தி நிர்ணயம் செய்திட உத்தரவிட்டுள்ளதை பற்றி விளக்கினார். மேலும் நீதிமன்ற வழக்கு தொடர்பாக மாநில அமைப்பின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கினார். 01-02-2012 அன்று நடைபெறும் ஜாக்டோ போராட்டத்தின் போது பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என்பன சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுடைய வழிகாட்டுதல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பன சார்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில பொருளாளர் கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டமும் மாநில அமைப்பிற்கு செலுத்திய நிதியினை பட்டியலிட்டு விளக்கினார். தொடர்ந்து மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் மாநில அமைப்பிற்கு செலுத்த வேண்டிய நிதி பங்களிப்பை அனைத்து மாவட்டங்களும் உடன் வழங்கிட வலியுறுத்தினார். மேலும் சென்னை சு.ரெங்கராசு, திருவள்ளூர் தே.வீரராகவன்,  நாமக்கல் இரா.வெங்கிடாஜலம்,  விழுப்புரம் இரா.பொய்யாமொழி,  திருவள்ளூர் இ.குருநாதன், நாகை இராமமூர்த்தி, அரியலூர் அ.மதலைராஜ் ஆகியோர் பேசினார்கள்.
          இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியராக சென்றுள்ள திரு. ஜான் அல்போன்ஸ் அவர்களுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டு காஞ்சி மாவட்டம் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டது.
                 சென்னை மயிலாப்பூர் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றும் திரு.கு.சங்கர் அவர்கள் 31-01-2016 அன்று பணிஓய்வு பெறுவதை தொடர்ந்து அவருக்கு மாநில அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.