பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, February 2, 2016

செங்கல்பட்டில் 31-01-2016 அன்று நடைபெற்ற ஆறு மாவட்டங்கள் பங்கேற்ற மண்டலமாநாடு மற்றும் மாநில செயற்குழு கூட்டம்

              தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற மாநில செயற்குழு கூட்டம் செங்கல்பட்டில் 31-01-2016 அன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பேற்று நடத்திய இக்கூட்டத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் சொ.சிவசங்கரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் இரா.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக்கிளை  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4800 தர ஊதியம் உயர்த்தி நிர்ணயம் செய்திட உத்தரவிட்டுள்ளதை பற்றி விளக்கினார். மேலும் நீதிமன்ற வழக்கு தொடர்பாக மாநில அமைப்பின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கினார். 01-02-2012 அன்று நடைபெறும் ஜாக்டோ போராட்டத்தின் போது பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என்பன சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுடைய வழிகாட்டுதல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பன சார்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில பொருளாளர் கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டமும் மாநில அமைப்பிற்கு செலுத்திய நிதியினை பட்டியலிட்டு விளக்கினார். தொடர்ந்து மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் மாநில அமைப்பிற்கு செலுத்த வேண்டிய நிதி பங்களிப்பை அனைத்து மாவட்டங்களும் உடன் வழங்கிட வலியுறுத்தினார். மேலும் சென்னை சு.ரெங்கராசு, திருவள்ளூர் தே.வீரராகவன்,  நாமக்கல் இரா.வெங்கிடாஜலம்,  விழுப்புரம் இரா.பொய்யாமொழி,  திருவள்ளூர் இ.குருநாதன், நாகை இராமமூர்த்தி, அரியலூர் அ.மதலைராஜ் ஆகியோர் பேசினார்கள்.
          இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியராக சென்றுள்ள திரு. ஜான் அல்போன்ஸ் அவர்களுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டு காஞ்சி மாவட்டம் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டது.
                 சென்னை மயிலாப்பூர் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றும் திரு.கு.சங்கர் அவர்கள் 31-01-2016 அன்று பணிஓய்வு பெறுவதை தொடர்ந்து அவருக்கு மாநில அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.









No comments:

Post a Comment