பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, September 24, 2017

ஊரகப்பகுதிகளில் அரசு மற்றும் சமுதாய கட்டிடங்களை பராமரித்தல் - அரசாணை.






எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

புதிய முகவரி

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, 'எமிஸ்' இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது.இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்' திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ - ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.
அழுத்தம்

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து,தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள். - தினமலர்.

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

Friday, September 22, 2017

இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் இதர விலையில்லா பொருட்கள் விநியோகம் -, போக்குவரத்து செலவினம் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.



வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது-ஐகோர்ட்டு

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்களும் பாதிக் கப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து, கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வந்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கடந்த 15-ந்தேதி ஆஜரானார் கள்.
விசாரணை முடிவில், ஜாக்டோ-ஜியோ சங்கங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விசாரிக்க தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிர மணியன், ஜான், மோசஸ் ஆகியோர் ஆஜரானார்கள்.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான குழு தனது அறிக்கையை வருகிற 30-ந்தேதி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று அக்டோபர் 13-ந்தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும்.”

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Thursday, September 21, 2017

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு- தினமலர்

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 20, 2017

DEEO - PA க்களுக்கு 22-09-2017 அன்று நிர்வாக திறன் மேம்படுத்துதல் பயிற்சி நடைபெறுகிறது.


உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை.

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது.
மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு - தினமலர்.

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Thursday, September 14, 2017

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் .

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூட மாணவர் கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பணியை தவிர்த்து மற்ற பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழன்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர் சங்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது, ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவை ஏன் அமல் படுத்தக்கூடாது என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு அதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

பாராட்டு

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு ஆசிரியர்கள் பணி சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பியதன் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை மேற்கொள்ளாமல் மற்ற பணிகளை மேற்கொண்டு வந்த ஆசிரியர்கள் முறையாக தங்களது பணியை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.

அரசு பள்ளியில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. தவறு செய்யும் ஆசிரியர்களுக்கே இந்த கோர்ட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது’ என்றார்.

வெட்கி தலைகுனிய வேண்டும்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நீட்’ தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி, அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற ஒரு நிலையை பார்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றும் கூறினார்.
ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வரும் காலத்தில் எந்த காரணத்திற்காகவும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாதபடி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாகவும், கோர்ட்டு உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி ஆசிரியர்கள் போராட்டம் சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அது வருமாறு:-

* எத்தனை ஆசிரியர் சங்கங்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?.

* எத்தனை ஆசிரியர்கள் பணியை புறக்கணித்துள்ளனர்?.

* தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்?.

* தமிழக மக்கள் தொகையில் ஆசிரியர் விகிதாச்சாரம் எவ்வளவு?.

* ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் ஊதியம், அதிகபட்ச ஊதியம் எவ்வளவு?.

* பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?. தமிழக பட்ஜெட்டில் அது எத்தனை சதவீதம்?.

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

* தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் உள்ளனர்?. அவர்களின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வளவு?.

* தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறதா?.

* ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள பள்ளிகள் எத்தனை?

* போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.

மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி இன்று (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

நிபுணர் குழு
இதற்கிடையே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
 

Tuesday, September 12, 2017

11-09-2017 அன்று போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பெயர் விபரம் கேட்பு.



மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தினமலர்.

மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது
அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.
இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில்
டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால் வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்' (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில் சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, 'கெடு- தினமலர்.


வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது,

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், செப்., ௭ முதல், காலவரையற்ற போராட்டம் துவங்கியுள்ளது.
'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
தேர்வு பாதிப்பு
அதனால், பள்ளி, கல்லுாரிகளில் வகுப்புகளும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை தடுப்பது குறித்து, தமிழக தலைமை செயலர், கிரிஜாவைத்தியநாதன் தலைமையில், உயர் அதிகாரிகள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
'எஸ்மா' எனப்படும், அத்தியாவசிய பணிகள் சட்டத்தின், ஒரு பகுதியை மட்டும் அமலுக்கு கொண்டு வரலாமா; அதற்கு முன் விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கலாமா என, விவாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, முதல் கட்ட எச்சரிக்கை விடுக்க முடிவானது. இதன்படி, பள்ளிக் கல்வி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, சங்க நிர்வாகிகளிடம் தனித்தனியாக பேச்சுநடத்தப்படுகிறது.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள, 95 சங்கங்களின் மாநில தலைவர்கள், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும், அரசு தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் பணிக்கு திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.'