பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, September 12, 2017

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, 'கெடு- தினமலர்.


வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது,

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், செப்., ௭ முதல், காலவரையற்ற போராட்டம் துவங்கியுள்ளது.
'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
தேர்வு பாதிப்பு
அதனால், பள்ளி, கல்லுாரிகளில் வகுப்புகளும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை தடுப்பது குறித்து, தமிழக தலைமை செயலர், கிரிஜாவைத்தியநாதன் தலைமையில், உயர் அதிகாரிகள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
'எஸ்மா' எனப்படும், அத்தியாவசிய பணிகள் சட்டத்தின், ஒரு பகுதியை மட்டும் அமலுக்கு கொண்டு வரலாமா; அதற்கு முன் விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கலாமா என, விவாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, முதல் கட்ட எச்சரிக்கை விடுக்க முடிவானது. இதன்படி, பள்ளிக் கல்வி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, சங்க நிர்வாகிகளிடம் தனித்தனியாக பேச்சுநடத்தப்படுகிறது.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள, 95 சங்கங்களின் மாநில தலைவர்கள், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும், அரசு தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் பணிக்கு திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.'

No comments:

Post a Comment