பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Saturday, January 25, 2014

உ.தொ.க.அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்து மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களுடன் சந்திப்பு.

                      உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 22-01-2014 அன்று மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தனர். பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்கிறேன் என்ற உறுதியை இயக்கப் பொறுப்பாளர்களிடம் மதிப்புக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அளித்தார்கள். 
       மறுநாள் 23-01-2014 அன்று மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மாதவராஜன் ஆகியோர் சார்பு செயலர் திரு. தவசி அய்யா, மதிப்புக்குரிய பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச்செயலாளர் திருமதி சபிதா ஆகியோர்களை சந்தித்து 3% உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், AEEO பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றுவது சார்ந்து மனுக்களை அளித்தனர். மலர்ந்த முகத்துடன் விவரங்களை பெற்றுக்கொண்ட மதிப்புமிகு முதன்மைச்செயலர் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

Tuesday, January 14, 2014

மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் இயக்குநர்களை சந்தித்து நாட்காட்டி, நாள்குறிப்பு வழங்கி புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

           பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர், SERT இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழக மேலான்மை இயக்குநர், இணை இயக்குநர்(பணியாளர்), தொடக்கக்கல்வித்துறை இணை/துணை இயக்குநர்கள் ஆகியோரை சந்தித்து மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், மாநில பொருளாளர் ப.மாதவராஜ், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ், காஞ்சி மாவட்ட தலைவர் சார்லஸ் பீட்டர் மற்றும் மாநில நிர்வாகிகள் நமது சங்கத்தின் 2014 ஆம் ஆண்டு நாட்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றை வழங்கி புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தனர். அவ்வமயம் சந்தித்த பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பொதுச்செயலாளரையும் நமது சங்க செயல்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்கள். தமிழ்நாடு பட்டாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் நமது செயல்பாடுகளை பாராட்டியதோடு நாட்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.

Tuesday, January 7, 2014

காரைக்குடியில் 05-01-2014ல் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:

             05-01-2014ல் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு காரைக்குடியில் நடைபெற்றது.  2014 ஆம் ஆண்டின் நாட்காட்டி, நாள்குறிப்பு வெளியிடுதல்  மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ள உ.தொ.க.அலுவலர்களுக்கான பாராட்டு விழாவும் இந்நிகழ்வில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் திரு.யேசுவடியான் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.பாஸ்கரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொருளாளர் திரு.மாதவராஜ், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,  பங்கேற்று பேசினார்கள். விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டி மாநில மாநாடு நடத்துவது எனவும், பொங்கல் பரிசு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டை ஏற்றுக்கொண்டனர்.























Wednesday, January 1, 2014

நமது சங்க கோரிக்கை ஏற்பு - நீதிமன்ற வழக்குகளை கவனிக்க ''லீகல் செல்'' அமைத்திட பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை.

நீதிமன்ற வழக்குகளை கவனிக்க ''லீகல் செல்'' அமைத்திட வேண்டும் என்று நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.முந்நாள் கல்வி அமைச்சர்  வைகைச்செல்வன் அவர்கள் சங்கப்பொறுப்பாளர்களிடம் சென்னையில் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுச்செயலாளர் இதனை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்களிடம் வலியுறுத்தப்பட்டது. 

AEEO, Supervisor -களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெறும் விபரம்




Date   ·
Place

Districts covered
3.1.2014
·        Friday
Coimbatore     .
Coimbatore, The Nilgiris, Tiruppur,
Karur, Dindigul
·6.1.2014
Monday
Tirunelve li
Tirunelveli, Thoothukudi,
Kanyaku.mari, Virudhunagar
.     7.1.2014
.  Tuesday
Madurai
Madurai, Theni,  Ramanathapuram,
Sivaqangai, Pudukkottai
8.1.2014
Wednesday
Trichy
Trichy, Perambalur, Ariyalur, Tiruvarur,.  Thanjavur, Naqapattinam
10.1.2014
Friday
Erode
Erode, Salem, Namakkal,
Dharmapuri, Krishnaqiri
11.1.2014
Saturday
Vellore
Vellore, Tiruvannamalai, Villupuram 1 Cuddalore
27.1.2014
Monday
Chennai

Chenna i, Tiruvallur, Kancheepuram