பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, January 4, 2017

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 2017 நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி அழைப்பு. திருச்சியில் டி.வி.எஸ். டோல்கேட் ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 08-01-2017 அன்று நடைபெறுகிறது.

            தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 2017 நாட்காட்டி,நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி திருச்சி, TVS டோல்கேட் அருகில் உள்ள ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10.30 மணிக்கு நடைபெறுகிறது. உறுப்பினர் சந்தா நிலுவை, டைரி நிலுவை ஒப்படைத்திட வேண்டும். ஒரு டைரி + நாட்காட்டி விலை ரூ.200 ஆகும். கூடுதல் நாட்காட்டி தேவைப்படுவோர் ரூ.50 கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் 09-01-2017 திங்கள் , 10-01-2017 ஆகிய இரு நாட்கள் சென்னையில் இயக்குநர்கள், அமைச்சர் பெருமக்களை சங்கத்தின் சார்பில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாநில செயற்குழு மற்றும் சென்னை சந்திப்புக்கும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் வருகைதர கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இரா.இரவிச்சந்திரன் - மாநிலத்தலைவர், சி.பாஸ்கரன் - பொதுச்செயலாளர், 
ப.மாதவராஜன்- மாநிலப்பொருளாளர், இரா.தமிழ்ச்செல்வன்- மாநில இணைச்செயலாளர்.

No comments:

Post a Comment