பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, October 13, 2017

7வது ஊதியக்குழு சில விபரங்கள்..

1.     தர ஊதியம் அகற்றப்பட்டு LEVEL 1 to 32 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 2.      Pay Matrix-ல் பதவி உயர்வில் செல்லும் போது ஒரு LEVEL அடுத்த நிலைக்கு (Horizontal Range) இடதுபுறமாகவும், ஆண்டு ஊதிய உயர்வுக்கு  (Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

3.      தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் செய்திட வழக்கம் போல்3% வழங்கப்பட்டுள்ளது. PAY MATRIX அட்டவணையில் (Vertical Range) இரு STEP கீழாகவும் வைத்து ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.

4.      01.01.2016 அல்லது விருப்பம் தெரிவிக்கும் நாளில் அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி எடுத்துக்கொண்டு 2.57 ஆல்பெருக்கப்பட்டு புதிய ஊதியம்  நிர்ணயம் செய்யப்படவேண்டும். இது 01.01.2016 அல்லது அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு நாள் அல்லது அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்குள் பதவி உயர்வில் சென்ற தேதி ஆகியவற்றில் ஒன்றை விருப்ப நாளாக தெரிவித்திட வேண்டும்.
5.  ஊதிய நிர்ணயம் செய்திட அடிப்படை ஊதியம் + தர ஊதியம் மட்டும் கணக்கில் எடுத்திட வேண்டும். (இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ரூ.750 தனி ஊதியத்திற்கு தனியாக ரூ. 2000/- தனி ஊதியமாக வைத்திட வேண்டும்).
6. அகவிலைப்படி.
    01-01-2016     =  0 % புதிய அடிப்படை ஊதியத்திற்கு
    01-07-2016     =  2 %                      ”
    01-01-2017     =  4 %                      ”
    01-07-2016     =  5 %                       ”
7. இதர படிகள் ( HRA, CCA) பட்டியல் தனியாக அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
8. இனி ஆண்டு ஊதிய உயர்வுகள் PAY MATRIX அட்டவணையின் படி Vertical Range) ஒரு STEP கீழாகவும் வைத்து ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ---- தொடரும்.

No comments:

Post a Comment