பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, March 6, 2016

இன்று 06-03-2016 திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள்.

          தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் மாநிலத் தலைவர் இரா. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டச் செயலாளர் இ.ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநில முழுவதும் 23 மாவட்டங்களில் இருந்து வருகைதந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் 70 பேர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் நமது சங்கத்தின் செயல்பாடுகளையும், நமது முக்கிய கோரிக்கையான உதவி தொடக்ககல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்தி ரூ.4800 தர ஊதியம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவது,  குறிப்பேடுகள் மற்றும் பாடபுத்தகம் ஆகியவற்றை மாவட்ட மையத்தில் இருந்து ஒன்றியத்திற்கு எடுத்து சென்று வழங்கிட போக்குவரத்துச் செலவினம் அனுமதித்துள்ள அரசாணை பெற சங்கம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாவட்டங்களில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பிரச்சனைகள் சார்ந்து மாநில அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குநர் மூலமாக தீர்வு கண்டுள்ள செயல்கள் பற்றி பேசினார். மாவட்டச் செயலாளர்கள் பேசும் போது புதியதாக அரசாணைகள் வெளியாகும் போது அதனை நடைமுறைப்படுத்துவது சார்ந்து நமது சங்கம் வழிகாட்டுவது மற்றும் அந்த நடைமுறையை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக  அனைவரும் பின்பற்றுவது, மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் மாநில முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுவது, சங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிதியினை நிலுவை வைத்துள்ள மாவட்டங்கள் அடுத்த கூட்டத்திற்குள் முழுவதுமாக வழங்குவது, அரசாணைகளின் தொகுப்பு வெளியிடுவது ஆகியவை சார்ந்து கருத்துகளை கூறினார்கள் . மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் சங்கம் வலுவாக தொடர்ந்து செயல்படவும், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறைபடுத்திடவும் நிதியினை காலதாமதம் இன்றி உடன் வழங்கிடுவதின் தேவையை வலியுறுத்தினார். கூட்டத்தில் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக  பதவி உயர்வில் சென்றுள்ள இராமநாதபுரம் இரா.துரைராசு அவர்கள் சங்கம் இல்லை எனில் தனக்கு தற்போது பதவி உயர்வு கிடைத்திருக்காது எனவும் சங்கத்திற்கும், மாநில பொதுச்செயலாளருக்கும் நன்றி தெரிவித்தார். செயற்குழுவில் அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  மாநில தலைமை நிலையச்செயலாளர் மு.இராஜேந்திரன் நமது சங்க நிகழ்வுகளை கூறினார். மாநில பொருளாளர் ப.மாதவராஜன்  நன்றி கூறினார்.
                                                       தீர்மானங்கள்:
1. ஜீலை - 2016ல் மாநில தேர்தல் நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
2. 2016 ஜீன் மாதம் விலையில்லா நோட்டு புத்தகங்கள் எடுத்துவர லாரி வாடகை ஜீன் மாதம் வழங்க வேண்டும். காலதாமதமாக கிடைப்பதால் உரியவர்களுக்கு அது கிடைக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே இது சார்ந்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3. பணியில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் முன்னுரிமைப்பட்டியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் தயாரித்து வெளியிட கேட்டுக்கொள்ளவது என தீர்மானிக்கப்பட்டது.







No comments:

Post a Comment