பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, June 7, 2016

திருச்சி செயற்குழுவில் தெரிவித்தவாறு 2016 - 2017 கல்வியாண்டிற்கு பாடபுத்தகம், குறிப்பேடு - போக்குவரத்து செலவினம் DEEO கூட்டத்தில் காசோலை வழங்கப்பட்டுள்ளது.

                 திருச்சியில் 22-05-2016 அன்று நடைபெற்ற செயற்குழுவில்  பொதுச்செயலாளர் 2016 - 2017ஆம் கல்வியாண்டிற்கு பாடபுத்தகம், குறிப்பேடு ஆகியவற்றிற்கான போக்குவரத்து செலவினம் 30-06-2016க்குள் பெற்றுவிடலாம் என குறிப்பிட்டவாறு அந்தந்த மா.தொ.க.அலுவலர்களிடம் சென்னையில் 06-06-2016 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் நடத்திய கூட்டத்தில் குறிப்பேட்டிற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மா.தொ.க.அலுவலர்களை தொடர்புகொண்டு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உரிய முன் பணம் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது பாடபுத்தகம் 2016 -2017 கல்வி ஆண்டில் பெறுவதற்கான போக்குவரத்து செலவினத்திற்கான காசோலை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மா.தொ.க.அலுவலர்களிடம் வழங்குவதற்கு தயாராக உள்ளது. சென்னை செல்லும் உ.தொ.க.அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் அவர்களது மாவட்ட காசோலையை பெற்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து உரிய தொகையினை பெற்றிட தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment