பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, May 25, 2016

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தமிழக அமைச்சர்களுடன் இன்று 25-05-2016 சந்திப்பு.

              பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி. பெஞ்சமின் , முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரும் இந்நாள் வணிகவரித்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. கே.சி.வீரமணி, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி எஸ்.வளர்மதி,  விவசாயத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆர். துரைக்கண்ணு , மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. தங்கமணி ஆகியோரை தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் இரவிச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் மாதவராஜன், தலைமைநிலையச் செயலாளர் இராசேந்திரன் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுச்செயலாருடன் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மகிழ்ச்சியோடு பேசி மகிழ்ந்ததுடன் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment