பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, May 22, 2016

திருச்சியில் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் நிகழ்வுகள்.

             திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு தலைவர் இரவிச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தியதோடு இடையிடையே மாநில அமைப்பின் செயல்பாடுகள் நீதிமன்ற வழக்குகள் சார்ந்து விளக்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார். 
              தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பொதுச்செயலாளரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
           தொடர்ந்து பேசிய மாநில பொதுச்செயலாளர் திரு. சி. பாஸ்கரன் சங்கத்தின் கடந்தகால செயல்பாடுகளை தெளிவாக விளக்கியதோடு பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது தொடர்பான நிகழ்வுகளையும் இது சார்ந்து மாநில அமைப்பு மாநிலத் தலைவர் இரவிச்சந்திரன் பெயரில் தற்போது பெற்றுள்ள  தீர்ப்பு அதன் தொடர் செயல்பாடுகள், விலையில்லா பொருட்கள் பெற்று வழங்கியமைக்கான கடந்தகால போக்குவரத்து செலவினம் நிலுவை இல்லாமல் பெற்றுள்ளது ஆகியற்றில் சங்கத்தின் பங்களிப்பினை எடுத்துக் கூறினார். மேலும் 2016 - 2017 கல்வியாண்டிற்கு குறிப்பேடு - போக்குவரத்து செலவினம் முன்பணமாக அனுமதித்து மாண்புமிகு தமிழக முதல்வர் உத்திரவிட்டுள்ளதையும் ,  பாடபுத்தகம் போக்குவரத்து  செலவினம்  தொகை முன்பணமாக பாடநூல் கழகத்தில் இருந்து வழங்கிட உள்ளதால் இத்தொகைகள் சூன் மாதத்திற்குள் அலுவலர்கள் பெற உள்ளதையும், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு  விரைவில் பெற உள்ளதாகவும் பொதுச்செயலாளர் கூறினார். 
            மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் வருகை தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதற்காக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் செலவு செய்துள்ள தொகை, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் விபரம், மாவட்டங்களில் தங்கள் ஒன்றிய ஆசிரியர்கள் மீது அலுவலர்கள் அனுப்பியுள்ள புகார் மனு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நிலுவையிலுள்ள விபரம், ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களில் சிலர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு எதிராக செயல்படும் விவரங்கள், அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆகியவை பற்றி எழுத்துபூர்வமாக ஆதாரங்களை மாநில அமைப்பிடம் வழங்கி மாவட்ட செயல்பாடுகளை பற்றி உரையாற்றினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து 75 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் செயற்குழுவில் பங்கேற்றனர். மாநில பொருளாளர் மாதவராஜ் சங்க வரவு செலவு விபரங்களை கூட்டத்தில் வாசித்து மாநில அமைப்புக்கு வழங்க வேண்டிய நிதிகளையும், சங்க வளர்ச்சி நிதியினையும் விரைந்து வழங்கிட கூறினார்.
                  நமது சங்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை உணர்ந்து  மாவட்டங்களில் சில தனிப்பட்ட ஆசிரியர்களின் வெறுப்பினால் பாதிப்புக்கு உள்ளான உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஈரோடு மாலதி, மண்ணச்சநல்லூர் கிளாரா மற்றும் திருப்பூர் மாவட்ட பிரச்சனைகளை நேரில் விளக்கியதை போன்று எதிர்காலத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டங்களில் எடுத்து கூறி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், சங்கம் சிறப்பாக செயல்படவும், பதவு உயர்வு பணியிடம் சார்ந்த வழக்கினை நடத்திடவும், நிதிஆதாரம் முக்கியம் என்பதால் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள நிதியினை உடன் வழங்கிட வேண்டியதின் அவசியத்தையும் மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறினார்.
          மாநில தலைமை நிலையச் செயலாளர் இராசேந்திரன் வேலூர் மாவட்ட நிகழ்வுகளை விளக்கினார். மாநில பொதுக்குழு மற்றும் மாநில அமைப்புத் தேர்தல் எதிர்வரும் சூலை மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் நடத்திட விழுப்புரம்  மாவட்டம் விருப்பம் தெரிவுத்துள்ளதை ஏற்பதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
          .  கூட்டத்தில் சில அரசாணைகள் சார்ந்து உதவி தொடக்கக்ல்வி அலுவலர்கள் ஐயங்களை எழுப்பினார்கள். நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பி.எட் உயர்கல்வி ஊக்க ஊதியம் கோரும் நிகழ்வில் விதிகளில் இடமில்லாததால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. சில அரசாணைகள் சார்ந்து மாவட்டம், ஒன்றியம் இவற்றில் ஒரு இடத்தில் அனுமதிப்பது, மற்றொரு இடத்தில் நிராகரிப்பது போன்ற நிகழ்வுகளால் தேவையற்ற வழக்குகள் நீதி மன்றங்களில் தொடுக்கப்படுவதால் இனி வரும் காலங்களில்  மாநிலம் முழுவதும் ஒரேமாதிரியான நடைமுறை பின்பற்றுவது சார்ந்து முடிவெடுப்பது என்பன பற்றியும் விவாதிக்கப்பட்டது. மாநில பொருளாளர் மாதவராஜ நன்றி கூறினார்.










No comments:

Post a Comment