பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, June 23, 2014

விடுமுறை கால பயண சலுகையில் மோசடிஅரசு ஊழியர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை

புதுடில்லி:விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்ததாக, நிதி அமைச்சகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட, ஐந்து பேருக்கு, நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும், விடுமுறை கால பயணச் சலுகையில், போலி பில்களை கொடுத்து, 4.2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நிதி அமைச்சகத்தை சேர்ந்த, ஐந்து அதிகாரிகள் மீது, வழக்கு தொடரப்பட்டது. இதில், மூன்று பேர், பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு, டில்லி சி.பி.ஐ,, கோர்ட்டில் நடந்தது. இதில், சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சஞ்சீவ் ஜெயின் அளித்த தீர்ப்பு:
லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக உள்ளன. லஞ்சத்தை, ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

லஞ்சம் வாங்கியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் பயம் ஏற்பட வேண்டுமெனில், இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.எனவே, விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்த ஐந்து பேருக்கும், நான்காண்டு சிறைத் தண்டனையும், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment