பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, March 23, 2016

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, 

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற அரசாணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. 

பாரபட்சம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவுசெய்வதற்கு முன்பு தமிழக அரசின் ஒப்புதலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெறவேண்டும் என்று கடந்த 1988 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைகள், சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகவும், அரசு ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். 

புதிய அரசாணை 

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஏற்கனவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை மேற்கொள்ள வகுத்தளிக்கப்பட்டிருந்த வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்தும் உடனே ரத்து செய்யப்படுகின்றன. அந்தஸ்து அல்லது குரூப் போன்றவற்றை தவிர்த்து எந்த நிலை அரசு அலுவலராக இருந்தாலும், அவர்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அந்த புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பின்னரே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தவேண்டும் என்ற புதிய அரசாணை கடந்த பிப்ரவரி 2-ந் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. 

சட்டவிரோதமானது

இந்த புதிய அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஒப்புதல் பெற்ற பின்னரே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற அரசாணை சட்டவிரோதமானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. பிப்ரவரி 2-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். 

தடை மறுப்பு 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும். விசாரணையை வருகிற ஜூன் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Friday, March 18, 2016

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவு.

      நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் சென்ற பிறகு பி.எட் கல்வித்தகுதி பெற்றால் அதற்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கக்கூடாது. ஏனெனில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பி.எட். ஒரு கல்வித்தகுதிதானே தவிர உயர்கல்வி என கருதகூடாது. தொடர்ந்து எம்.ஏ. உயர்கல்வித் தகுதி பெற்றால் ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம். இதற்கு ஆதாரமாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



Thursday, March 17, 2016

மாநில நிர்வாகிகள் 5-03-2016 அன்று சென்னையில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளரிடம் அளித்துள்ள கடிதம்.

            மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், தலைவர் இரா.இரவிச்சந்திரன், பொருளாளர் ப.மாதவராஜன், இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடந்த 06-03-2016 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 15-03-2016 அன்று சென்னையில் பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளரிடம் அளித்துள்ள கடிதம்.




மாநில நிர்வாகிகள் தலைமைத்தேர்தல் ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து அளித்துள்ள தேர்தல்பணி தொடர்பான வேண்டுகோள் விபரம்.





Wednesday, March 9, 2016

தமிழக அரசு பள்ளிகளில் SSA நடத்திய ஆய்வு - நன்றி தினமலர்.

           தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசால் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை எப்படி செலவு செய்து, மார்ச்சுக்குள் கணக்கு கொடுப்பது என்பதே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் முக்கிய பணி. மாணவர்களுக்கு புதுமையான முறையில் கற்று கொடுக்கின்றனரோ, இல்லையோ, ஆசிரியர்களை அவ்வப்போது அழைத்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி, டீ, காபி, மதிய உணவு உபசரிப்புடன் ஒரு நாள் முழுவதும், பொழுதை போக்கி அனுப்பி விடுவர்.

எஸ்.எஸ்.ஏ.,வில் பெற்ற பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர் வழங்கினாரா என்ற கவலை, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகளுக்கு இல்லை. அவர்களை பொறுத்தவரை, மத்திய அரசு அளித்த நிதியை அவர்கள்
கூறியபடி, பயிற்சி வகுப்பு நடத்தி செலவழித்து உரிய காலத்தில் கணக்கு காட்டி விட வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்தினர்; மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றல் திறனை அடைந்தனர் என, ஜனவரியில், 500 பள்ளிகளில் தோராயமாக கணக்கெடுப்பு பணியை, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

இந்த முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ௮ம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதித்ததில், தமிழ் பாடத்தில், 75 சதவீதத்துக்கு மேல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டம், 80 சதவீதத்துடன் முதலிடம் பெற்று உள்ளது. இந்த மாவட்டம், 20ஆண்டுகளுக்கும் மேலாக, 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பின் தங்கிய மாணவர் பட்டியலில், திருவாரூர் மாவட்டம், 25 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இங்கு படிப்போரில், 25 சதவீதம் பேர், தமிழில், 50 மதிப்பெண்களுக்கு
குறைவாக பெற்றுள்ளனர். ஆங்கிலம், கணித பாடங்களில் கிருஷ்ணகிரி முன்னிலையிலும், திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன. அறிவியலில் கிருஷ்ணகிரி முன்னிலையிலும், தேனி, திருவாரூர் பின்தங்கியும் உள்ளன. 5ம் வகுப்பில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தரத்தில் முன்னிலையில் உள்ளன. சேலம் மாவட்டம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் பின் தங்கிஉள்ளது.தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த மாவட்டமான, திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகள், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கல்வித்தரத்தில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -