பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, January 4, 2015

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்வுகள்.

 தமிழ்நாடு உதவி  தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெளியிட்டு நிகழ்ச்சி மாநில துணைத்தலைவர் திரு.கே.எம். சீனுவாசன் அவர்கள் தலமையில் திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்ட செயலாளர் இ.ஜெகநாதன் அனைவரையும் வரவேற்றார்.மாநில மகளிர் அணி துணைச்செயலாளர்  ஆ.பூங்கொடி அவர்கள் வெளியிட மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். பொதுச்செயலாளர் சு.பாஸ்கர் மற்றும் மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள இயலாத நிலையின் காரணமாக மாநில பொருளாளர் ப.மாதவராஜன், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில தலைமைநிலையச்செயலாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் சங்க நிகழ்வுகளையும் மாநில மாநாட்டு செய்திகளையும் விளக்கினார்கள். 27 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் பூங்கொடி நன்றி கூறினார். 










              

Thursday, January 1, 2015

பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர் மரணம். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.



            தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு சு.பாஸ்கர் அவர்களின் மூத்த சகோதரர்  திரு. சு.வெங்கடவரதன் அவர்கள் இன்று (01-01-2015) அதிகாலை மரணம் அடைந்தார்.  அவரின் பிரிவால் வாடும் பொதுச்செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.

அனைவருக்கும் 2015 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


Monday, December 29, 2014

நாளை 30-12-2014 அன்று 128 தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் 42 நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகின்றது.

விழுப்புரம் மண்டலக்கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு.

             விழுப்புரம், கடலூர் மாவட்டம் இணைந்த விழுப்புரம் மண்டலக்கூட்டம் விழுப்புரத்தில் 27-12-2014 அன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் பாஸ்கர் அவர்கள் சங்க செயல்பாடுகள் பற்றியும், மாநில மாநாடு பங்கேற்பு பற்றியும் பேசினார்கள். அனைவரும் மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளனர்.