பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Friday, January 8, 2016

திருச்சியில் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில விரைவு செயற்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் அறிவிப்பு.

             தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் விரைவு செயற்குழு கூட்டம் மாநில தலைவர் இரா. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள  பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10-01-2016 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில்  மிக  முக்கியமான  நிகழ்வுகள்  பற்றி  பொதுச்செயலாளர்  திரு. சி. பாஸ்கர் அவர்கள் அறிவிக்க உள்ளார்கள். எனவே செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தவறாது வருகைதந்து சங்கத்திற்கு வலுவூட்டிட கேட்டுக்கொள்கிறோம்.
       மேலும் மாவட்டங்கள் தோறும் பயணப்பட்டியல் நிலுவைத்தொகையினை வருடங்கள் குறிப்பிட்டு எவ்வளவு நிலுவை உள்ளது என்ற விபரத்தை மாவட்டச் செயலாளர்கள் (இயன்றால் ஒன்றிய வாரியாக) அளித்தால் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அளித்து கூடுதல் நிதி கோரிட வசதியாக இருக்கும்.
       நமது கோரிக்கையை ஏற்று அன்மையில் சென்னையில் நடைபெற்ற  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில்  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பயணப்பட்டியல் நிலுவையை வழங்கிட கூடுதல் தேவைப்பட்டியல் அளித்திட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட கடிதத்தில் ( லெட்டர் பேடில்) மேற்குறிப்பிட்ட விபரங்களை எழுதி எடுத்துவர கேட்டுக்கொள்கிறோம்.
     இக்கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டு நாள்குறிப்பு, நாட்காட்டி வெளியிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து ரூ.200 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தவறாது வருகைதந்து தங்களுக்கு தேவையான எண்ணிக்கைக்கு தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
       மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றியும், 2014 - 2015 நோட்டுபுத்தகங்களுக்கான லாரி வாடகை காசோலையை மாவட்ட  தொடக்கக்கல்வி அலுவலர்கள்  வழங்காத விபரத்தையும் லெட்டர் பேடில் எழுதி எடுத்துவர வேண்டும்.
                 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் நாட்காட்டி, நாட்குறிப்பு  வழங்கப்பட உள்ளது.  அனைத்து மாவட்டப்பொறுப்பாளர்களும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். (வருகை தராத மாவட்டங்களுக்கு கண்டிப்பாக நாட்காட்டி, நாட்குறிப்பு லாரி பார்சல் மூலம் அனுப்பிட இயலாது) .

No comments:

Post a Comment