பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, January 11, 2016

திருச்சியில் 10-01-2016 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 10-01-2016 அன்று திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
         பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச்செயலாளர் மு.இராசேந்திரன், துணைச்செயலாளர் டே.மோசஸ் பெஞ்சமின், மகளிர் அணி துணைச்செயலாளர் ஆ.பூங்கொடி  மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் இ.ஜெகநாதன் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் மாதவராஜன் நன்றியுரையாற்றினார்.
 மாநில செயற்குழு தீர்மானங்கள்.
                 தீர்மானம் :1. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கி ஆணை வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
            தீர்மானம் :2.  அனைத்து  ஆசிரியர்களுக்கும் WEB PAYROLL மூலம் பட்டியல் தயாரித்து வழங்கும் வகையில் நிலுவையில் உள்ள கோப்பின் மீது உடனே நடவடிக்கை எடுத்து அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வலைதளவசதி ஏற்படுத்தி தருமாறு இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
                    தீர்மானம் :3. 2015 - 2016 கல்வியாண்டிற்குரிய முப்பருவமுறைக்கான  புத்தங்கங்களை NODEL மையத்திலிருந்து எடுத்து சென்று பள்ளிகளுக்கு வழங்கியமைக்கான லாரி வாடகை உடனே தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 2016 பிப்ரவரி -15 ஆம் தேதிக்குள் உரியபணம் வழங்கவில்லை எனில் இயக்க நடவடிக்கை எடுப்பது எனமுடிவாற்றப்பட்டுள்ளது.
             தீர்மானம் :4.  உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களையும், அமைச்சுப்பணியாளர் பணியிடங்களையும் உடனே நிரப்பித்தர கோட்டுக்கொள்கிறோம்.
            தீர்மானம் :5. அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் நிலுவையில் உள்ள பயணப்படியை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
          தீர்மானம்:6.  இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சார்ந்து அரசாணை எண் 25ஐ நடைமுறைபடுத்துவது குறித்து  அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment