பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, June 23, 2014

விடுமுறை கால பயண சலுகையில் மோசடிஅரசு ஊழியர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை

புதுடில்லி:விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்ததாக, நிதி அமைச்சகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட, ஐந்து பேருக்கு, நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும், விடுமுறை கால பயணச் சலுகையில், போலி பில்களை கொடுத்து, 4.2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நிதி அமைச்சகத்தை சேர்ந்த, ஐந்து அதிகாரிகள் மீது, வழக்கு தொடரப்பட்டது. இதில், மூன்று பேர், பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு, டில்லி சி.பி.ஐ,, கோர்ட்டில் நடந்தது. இதில், சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சஞ்சீவ் ஜெயின் அளித்த தீர்ப்பு:
லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக உள்ளன. லஞ்சத்தை, ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

லஞ்சம் வாங்கியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் பயம் ஏற்பட வேண்டுமெனில், இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.எனவே, விடுமுறை கால பயணச் சலுகையில் மோசடி செய்த ஐந்து பேருக்கும், நான்காண்டு சிறைத் தண்டனையும், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Wednesday, June 18, 2014

உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு

சென்னை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. இயக்குனர் இளங்கோவன் தலைமையில், 'ஆன் - லைன்' வழியில், 32 மாவட்டங்களிலும், கலந்தாய்வு நடந்தது. இதில், 344 அலுவலர்கள் பங்கேற்றனர். 156 பேர், விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு உடனே, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் கலந்தாய்வும், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏழு தலைமை ஆசிரியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பணி மாறுதல் பெற்றனர்.

Saturday, June 14, 2014

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு - தொடர்நடவடிக்கை சங்கம் மேற்கொண்டுள்ளது.

           மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை.

ஏ.இ.ஓ., பதவி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை. எங்களுக்கு மேல் பணியிடம் கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மேற்பார்வையாளர் சம்பளம் ஐகோர்ட் உத்தரவுப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு கிடையாது. தமிழக அரசு 2011 அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க வேண்டும். தேர்வு நிலை பணிக்கான நோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.