பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, December 7, 2015

இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது.

        தனி ஊதியம் ரூ.750 ஐ எடுத்து ஊதிய நிர்ணயத்திற்கு கணக்கிட்டுவிட்டு தொடர்ந்து அடிப்படை ஊதியத்துடன் ரூ.750ஐ இணைத்து ஊதியம் நிர்ணயம் சில மாவட்டங்களில் செய்துள்ளதால் 01-01-2011க்கு முன் பதவி உயர்வில் சென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் தனி ஊதியம் ரூ.750/- ஊதிய நிர்ணயத்திற்கு மட்டும் எடுத்துக்கொண்டு உயர்பதவியில் தனி ஊதியம் தொடரக்கூடாது என நிதித்துறை அரசு கடிதம் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

 அரசுக்கடிதத்தினை பதிவிறக்கம் செய்திட=====>




Sunday, December 6, 2015

அடாத மழையிலும் எழுச்சியுடன் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு.

           தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 06-12-2015 திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் மாநில தலைவர் இரா.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து புதியதாக மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற இச்செயற்குழுவில் 24 மாவட்டங்களில் இருந்து 100க்கும் அதிகமான பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி மார்ட்டின் வரவேற்புரை ஆற்றினார். 
              24 மாவட்டங்களைச்சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்திடுவது, நீதிமன்ற வழக்கு தொடர்பாக அலுவலர்கள் படும் துயரம், நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பயணப்படி நிலுவை, அரசாணைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறுவிதமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் முடிவு எடுப்பது, பி.எப். கணக்குத்தாளை பயன்படுத்துவது, இணையதளவசதி ஏற்படுத்தித்தருவது ஆகியவை தொடர்பாக கருத்துகளை தெரிவித்தனர்.
                தொடர்ந்து பேசிய மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பாஸ்கரன் நீதிமன்ற வழக்கு, மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பாக இதுவரை மாநில அமைப்பு எடுத்துவரும் நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள், குறிப்பேடுகள் பெற்று வழங்கியமைக்கு 2 ஆண்டுகளுக்கு நிலுவையில் உள்ள லாரி வாடகை தற்போது பெறப்பட்டுள்ளது, வழக்கு சார்ந்து அலுவலர்கள் படும் வேதனைகள் தொடர்பாக தொடர்நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து பேசினார்.
                   மாநில பொருளாளர் ப.மாதவராஜன் சங்க வரவு-செலவினை வாசித்து நிலுவை வழங்க வேண்டிய மாவட்டங்கள் விரைவில் வழங்கிட கூறினார். மாநில இணைச்செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் சங்க நிகழ்வுகளை பற்றி பேசி நன்றியுரை கூறினார். முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவாற்றப்பட்டது. 
















Friday, December 4, 2015

06-12-2015 அன்று மாநில செயற்குழு திட்டமிட்டபடி திருச்சியில் நடைபெறும். பொதுச்செயலாளர் அறிவிப்பு.

           தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. எனவே பொருப்பாளர்கள் அனைவரும் தவறாது 2016-நாட்குறிப்பில் வெளியிட ஏதுவாக மாவட்ட பொறுப்பாளர்கள் புகைப்படம் ஒட்டிய படிவத்துடனும், மாவட்டத்தில் பணிபுரியும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பட்டியலுடன் வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையாளராக செயல்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் படிவங்களை மாநில செயற்குழுவில் ஒப்படைத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள்.

         மாநில செயற்குழு முடிவின்படி புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் மாநில இணைச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினார். பொருப்பாளர்கள்  அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட பொறுப்பாளர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்கள் வாழ்த்தி பேசியதுடன் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பணிச்சுமையை பற்றியும், பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.

மாவட்ட தலைவர்                              : மு.முத்துக்குமார்.
மாவட்ட செயலாளர்                         : வெ.வீரையா.
மாவட்ட பொருளாளர்                      : செ.செங்குட்டுவன்.
மகளிர் அணிச்செயலாளர்             : சு.உமாதேவி.
மாநில செயற்குழு உறுப்பினர்     : இரா.மகேஸ்வரன்.