பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Monday, February 2, 2015

மாநில மாநாடு தொடர்பாக மாநில செயற்குழு கூட்டம் 01-02-2014 அன்று திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

       தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 01-02-2014 அன்று திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி சாக்ரட்டீஸ் வரவேற்புரை ஆற்றினார். மாநில முழுவதும் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன் சங்க செயல்பாடுகள், தாம்பரத்தில் நடைபெறும் மாநில மாநாடு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்தும், ஜேம்ஸ் நீதிமன்ற வழக்கினை தொடக்கம் முதல் சங்கம் நடத்தி வருவதையும், தற்போது முழுமையாக நமது சங்கம் அவ்வழக்கினை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதையும், வழக்கின் தற்போதைய நிலையினையும்  விளக்கினார். இவ்வழக்கு சார்ந்து தொடக்கம் முதல் சங்கத்தின் பங்கேற்பு தொடர்பாக மாநில பொதுச்செயலாளரின்  உரையினை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுடலைமணி ஆமோதித்து உரையாற்றினார். மாநில துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களையும் பங்கேற்றிட வலியுறுத்தினார். மாநிலப் பொருளாளர் சங்கத்தின் வரவுசெலவு அறிக்கையினை வாசித்து ஒப்புதல் பெற்றார்.மாநில இணைச்செயலாளர் நன்றி கூறினார். மாநில முழுவதும் இருந்து வந்த செயற்குழு உறுப்பினர்கள் கருத்துரைகளை வழங்கினார்கள். மாநில மகளிர் அணிச்செயலாளர் இந்திராதேவி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு மாலை சிற்றுண்டியினை சென்னை மாவட்டம் சார்பாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மாநாட்டில் வெளியிடப்பட உள்ள மாநாட்டு மலருக்கு சிறப்பான படைப்புகளை அனுப்பியுள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை பாராட்டியும், மேலும் அனுப்ப விரும்புவோர் 06-02-2015க்குள் பொதுச்செயலாளர் இல்ல முகவரி அல்லது aeeotamil@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்திடவும், ஒவ்வொரு மாவட்டமும் தலா 5 விளம்பரங்களை பெற்று அனுப்பிடவும்  வலியுறுத்தப்பட்டது. மாநாட்டு மலரில் மாவட்ட வாரியாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் குருப் போட்டோ வெளியிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி மாவட்டச்செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி,மாவட்ட மகளிர் அணி மாலதி, இலதா, புளோரா, செந்தாமரைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
            
                                                              தீர்மானங்கள்
    1. அரசாணை 182-ஐ அமுல்படுத்தியமைக்காக மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறி 08-02-2015அன்று நடத்த இருந்த மாநாடு 21-02-2015 அன்று தாம்பரம்  TGP - திருமண மண்டபத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
       2. பல்வேறு காலத்தில் மாநில செயற்குழுவில் தீர்மானித்த 16 தீர்மானங்கள் மாநில மாநாட்டுக்கு முற்பகல் நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.
       3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர்களையும், நட்பு சங்க பொறுப்பாளர்களையும் அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
      4. மாநாட்டில் காலை 9.30 மணிமுதல் மாலை 7.30 மணி முடிய நிகழ்வுகள் சார்ந்து ஒப்புதல் பெறப்பட்டது.
        5. மாநாடு சிறப்பாக நடத்திட மாநாடு சார்ந்த நிகழ்வுகளில் எந்த மாற்றமும் நடத்திட மாநில தலைவர், செயலர், பொருளர், இணைச்செயலாளர் ஆகியோர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.  





   
           மாநில செயற்குழுவில் திருச்சி மண்டலச்செயலாளர்  த.ஹேமலதா அவர்கள் எதிர்வரும் 15-02-2014அன்று அரியலூரில் நடைபெறும் தனது மகள் திருமண அழைப்பினை அனைவருக்கும் வழங்கியதோடு சங்க வளர்ச்சி நிதியாக ரூ.2000/-ம் தனது மருமகன் மூலம் வழங்கி அனைவரின் பாராட்டினை பெற்றார். அப்போது மாநில பொதுச்செயலாளர் அவர்கள் 15-02-2014 அன்று அரியலூரில் மாநில விரைவு செயற்குழுவினை நடத்தி மாநில மாநாட்டு அழைப்பிதழ், சுவரொட்டிகள் வழங்கலாம் என செயற்குழுவில் கூறியதை அனைவரும் ஏற்றனர்.

No comments:

Post a Comment