பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Sunday, September 22, 2013

22-09-2013 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.



1. அரசாணை 182 வெளியிட்டு ஆண்டுகள் ஆகியும் இது நாள் வரை நடைமுறைப்படுத்திடாத நிலையை மாநில செயற்குழு மிகவும் கவனத்துடன் விவாதித்தது. 182 அரசாணையை உடனே அமுல்படுத்தி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 3% உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உடனே வழங்கிட மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

2. காலாண்டுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இதுநாள் வரை 380 உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர் கல்வி நலன் கருதி விரைவில் நீதிமன்ற தடையாணையை நீக்கி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது பெறப்படும் உண்மையில்லாத புகாரின் மீதுகூட நடவடிக்கை என்பதை கைவிட்டு புகார் பெறப்பட்டால் இயக்குநர் அளவில் விசாரணை மேற்கொண்டு புகாரின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

4. அனைத்து AEEO அலுவலகங்களுக்கும் வலைதள வசதியுடன் கூடிய  கூடிய தொலைபேசி இணைப்பு வழங்கிட வேண்டுமாய் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

5. சங்கத்திற்காக வலைதள விலாசம் ஏற்படுத்திக் கொடுத்த திருச்சி தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு இம் மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

6. அனைத்து AEEO அலுவலகங்களுக்கும் கணினி தட்டச்சு பணியாளரை நியமித்திட இம் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7. இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வுநிலை பெறாமல் நடுநிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பணிமாறுதல் மூலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உரிய ஊதியவிகிதம் 4(3) மூலம் நிர்ணயம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்திடுமாறு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 
குறிப்பு. ( உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக உயர்த்துவது சார்ந்த கோப்பு அரசின்  பரிசீலனையில் இருப்பதால் இப்பொருள் சார்ந்து தீர்மானம் நிறைவேற்றவில்லை.)

No comments:

Post a Comment