தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் செய்திகளை வெளியிடுகிறது.
Sunday, June 8, 2014
Friday, June 6, 2014
தலைமைச்செயலகத்தில் 04-06-2014 புதன் அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமைச்செயலாளர் ஆகியோருடன் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு.
மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் அவர்களுடன் மாநில பொதுச்செயலாளார், மாநில தலைவர்
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு
மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மாதவராஜ், மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணைச்செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கல்வியாண்டின் தொடக்கத்தினை இயக்குநர் பெருமகனார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதவி உயர்வு கோரிக்கை, பயணப்படி நிலுவை சார்பாக பேசினார்கள்.
முன்னதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மதிப்புமிகு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை அரசு துணைச்செயலாளர் (சிறப்பு) மதிப்புமிகு சு.பழனிசாமி இ.ஆ.ப. அரசு துணைச்செயலாளர் (தொடக்கக்கல்வி) மதிப்புமிகு செல்வராஜ் ஆகியோரை சந்தித்து நமது முக்கிய கோரிக்கையான பதவி உயர்வு பணியிடம், பயணப்படி நிலுவை, நேரடி நியமன AEEO ஊக்க ஊதிய உயர்வு, பாடப்புத்தகம் & குறிப்பேடுகள் லாரி வாடகை ஆகியவை சார்ந்து விரிவாக பேசப்பட்டது. விரைவில் உரிய சட்ட திருத்தம் (amendment) வெளியிடுதல் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
Monday, June 2, 2014
Sunday, June 1, 2014
திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனைவர் திரு. பொன்னம்பலம் பணி ஓய்வு- மாநில இணைச்செயலாளர் பாராட்டு.
திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர், முனைவர் திரு.எல்.பொன்னம்பலம் அவர்களுக்கு மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி சாக்ரட்டிஸ், செயலர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், ஜான் போஸ்கோ, புகழேந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.
Subscribe to:
Posts (Atom)