பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, April 23, 2014

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிவசங்கரன் இல்ல நிச்சயதார்த்தவிழா- பொதுச்செயலாளர் பங்கேற்பு.

தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் புதல்வியின் நிச்சயதார்த்தவிழா 20-04-2014 அன்று செங்கல்பட்டு கிருஷ்ணமஹாலில் நடைபெற்றது.


மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், காஞ்சி மாவட்ட தலைவர் சார்லஸ், மாவட்ட பொருளார் ரமேஷ், மாநில இணைச்செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழ்நாடு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் மணமக்கள் எல்லா வளமும் பெற்று மனநிறைவோடு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்.

Saturday, March 22, 2014

`முதுக்குளத்தூர் உ.தொ.க.அலுவலர் திரு ஐ.சூசைதாஸ் அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம். மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

            



           தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலருமான திரு.ஐ.சூசைதாஸ் அவர்கள் 20-03-2013 அன்று மதுரையில் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து அகால மரணம் அடைந்துள்ளார்கள். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  அன்னாரின் சொந்த ஊரான  சவுரியாபட்டினத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொருளாளர் திரு.மாதவராஜன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அன்னாரின் உடலுக்கு மாநில அமைப்பின் சார்பில் மாநில தலைவர் திரு.சு.பாலகிருஷ்ணன் அவர்கள்  அஞ்சலி செலுத்தி உடலை உறவினரிடம் ஒப்படைத்தார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.