பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Tuesday, June 16, 2015

கர்நாடகாவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு - நன்றி தினமலர்.

பெங்களூரு: கர்நாடகாவில், 7ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட, தகுதி தேர்வு நடத்த ஆலோசித்து வரும் கல்வித்துறை, தற்போது, ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அறிய முன்வந்துள்ள கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். கர்நாடகாவில், 44 ஆயிரத்திற்கும் மேல் துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில், 1.74 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தரமான கல்வியளித்தால் மட்டுமே, பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது சாத்தியம். இந்த எண்ணத்தில், ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்த, கல்வித்துறை தீர்மானித்துள்ளது.இதன் மூலம் ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறனை மதிப்பிட்டு, அவர்களுக்கு பயிற்சியளிப்பது அரசின் திட்டம்.மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், பசவராஜ் குரிகார் கூறுகையில், ''தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்துவது, முட்டாள் தனம். அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, தேவையின்றி தேர்வு நடத்தினால் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

No comments:

Post a Comment