பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, June 10, 2015

மழலையர் முன்பருவக்கல்வி கூடங்களை ஒழுங்குபடுத்தும் வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைகள் வழங்கவிரும்புவோர் கீழ்க்கண்ட விபரப்படி வழங்கலாம்.

DIRECTORATE OF ELEMENTARY EDUCATION

The Draft Code of Regulations for Play Schools, 2015 is posted
in the Website (http://www.tn.gov.in/schooleducation/) for Opinion
of the Public .

Individuals / others may send their suggestions to the email id
deechennai@gmail.com or to the following address by post on or
before 5:00 p.m. on 22.06.2015
Director of Elementary Education,
Office of the Directorate of Elementary Education,
DPI Campus, College Road,

Chennai- 600 006
DIRECTOR OF ELEMENTARY EDUCATION

நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம் - நன்றி தினமலர்.

திண்டுக்கல்:கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு தொடர்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டிய பதில்களை தயாரிக்கின்றனர். சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது. சில நேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதோடு, ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும் உதவியாளர்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் மற்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: சட்ட நுணுக்கம் தெரியாததால் நீதிமன்றத்திற்கு பதில் தயாரிக்க முடியாமல் தவிக்கிறோம்.
மாவட்டந்தோறும் 300 வழக்குகள் வீதம் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. சொந்தப் பணத்தில் வழக்கறிஞர் கட்டணம் செலுத்துகிறோம்.
இப்பிரச்னையை தீர்க்க மாவட்டந்தோறும் கல்வித்துறைக்கென சட்ட
அலுவலரை நியமிக்க வேண்டும், என்றார்.

பணிப்பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்வதில் உள்ள குறைகளை சரிசெய்திடும் வகையில் அரசு வெளியிட்டுள்ள மாதிரி பதிவுகள் அடங்கிய அரசுக்கடிதம்.

மகப்பேறு விடுப்பு அனுமத்தித்தல் சார்ந்து அரசு அளித்துள்ள விளக்கம்.

01-01-2015 அன்று உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.