பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் email முகவரியை Follow by Email-ல் உள்ளிடுங்கள்.

Wednesday, June 10, 2015

சென்னையில் 17-05-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு தீர்மானங்கள்.




17-05-2015 அன்று சென்னை பல்லாவரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்.
1.          தடைகளை வென்று 5ஆம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி   டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். (மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்கள் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட வேண்டும் என சங்கத்தின் சார்பாக 06-10-2014 அன்று சீர்காழியில் உள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் சகஸ்ஹரநாம அர்ச்சனை செய்துள்ளதை இந்நேரத்தில் நினைவுகொள்கிறோம்).
2.          Web Pay Roll மூலம் மாதந்தோறும் ஊதியப்பட்டியல் தயாரித்திடுவதற்கு ஏற்ப அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கும் வலைதள வசதி ஏற்படுத்தித்தர தமிழக அரசை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
3.          உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமைப்பட்டியல் 01-01-2015 அன்றைய நிலவரப்படி வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநரை கேட்டுக்கொள்கிறோம்.
4.         உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம்.
5.         உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு சில்லரைச் செலவினத்தை அதிகப்படுத்த வேண்டுமாய் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

6.         தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிகள் தவிர்த்து மற்ற பணிகள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அளிக்கும் போது தொடக்கக்கல்வி இயக்குனர் வழியாக நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் மற்ற இயக்குனர்களும், முதன்மைக்கல்வி அலுவலர்களும் நேரடியாக எந்த பணியையும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
7.          உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3% உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கும் போது பதவி உயர்வினை துறக்க விருப்பம் தெரிவித்தால் அவ்விடத்தில் அடுத்தடுத்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கி அரசாணை 182 முழுமையாக நடைமுறைப்படுத்திட கேட்டுக்கொள்கிறோம். கடந்த கலந்தாய்வின் போது பதவி உயர்வினை பணித்துறப்பு செய்த 3 பணியிடங்களுக்கு முன்னுரிமையில் உள்ள அடுத்த 3 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் உடனே வழங்கிட மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் சட்டரீதியாக தீர்வு காண செயற்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.

மாநிலத்தலைவர்      பொதுச்செயலாளர்          மாநிலப்பொருளாளர்

   மாநில பொதுச்செயலாளர் செயற்குழு தீர்மானங்களை வாசிக்கின்றார்.



Sunday, May 31, 2015

இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி - நன்றி தினமலர்.

         சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சொந்த பணத்தில்...தமிழக தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை பெற்றுத்தரும் நிர்வாக அலுவலகமாக, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் உள்ளது. ஒரு ஒன்றியத்துக்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

           ஒவ்வொன்றிலும், 350 முதல், 700 ஆசிரியர் வரை, சம்பளம் பெறுகின்றனர். இவர்களின் சம்பள பில் தயாரிக்கும் முறை, கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து, ஆன் - லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சுற்றறிக்கை, துறை சார்ந்த கடிதம் உள்ளிட்டவையும், 'இ - மெயில்' மூலமாகவே அனுப்பப்படுகிறது.இதனால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், தினமும் பிராட்பேண்ட் வசதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இதுவரை எந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கும், இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித்தரப்படவில்லை. இதனால், அங்கு பணிபுரியும் அலுவலர்கள், தங்களது சொந்த பணத்தில், இன்டர்நெட் பயன்படுத்தி, பணிபுரிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

      ஆன் - லைனில்...இதுகுறித்து, கல்வித்துறை பணியாளர்கள் கூறியதாவது:உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10 முதல் 100 ஆசிரியர்கள் இருக்கும் சூழலில், அங்கு பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் அதற்கான கட்டணம், அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், பிராட்பேண்ட் வசதியில்லை.இதனால், ஆசிரியர்களிடம் வசூல்வேட்டை நடத்தியோ, அலுவலர்கள் தங்கள் கைக்காசை செலவழித்தும், இன்டர்நெட் வசதியை பயன்படுத்த வேண்டிஉள்ளது. அனைத்து பணிகளும், ஆன் லைனில் வழங்கிவிட்டு, அதற்கான வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.